முகப்பு /செய்தி /வணிகம் / பி.எம் கிசான் நிதி ரூ.6,000 தேவையில்லையா? - வருகிறது மத்திய அரசின் புது திட்டம்!

பி.எம் கிசான் நிதி ரூ.6,000 தேவையில்லையா? - வருகிறது மத்திய அரசின் புது திட்டம்!

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM Kisan scheme surrender Benefit : தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் மட்டுமே நிதி வேண்டாம் என்று அறிவிக்க முடியும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ்  பயனடைந்து வரும் விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று தெரிவிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுளளது.

நாட்டில் வேளாண் உற்பத்திக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில், பிரதம மந்திரி – கிசான் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இதன் கீழ், நிலமுள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/ வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயணாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தகுதியான பயனாளிகள், தங்களுக்கு பிம் கிசான் தவணை நிதி வேண்டாம் என்று தாங்களாக முன்வந்து கூறும் வாய்ப்பை (PM Kisan benefit surrender Scheme) மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்ட நடைமுறைகளின்படி, " தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் மட்டுமே நிதி வேண்டாம் என்ற வாய்ப்பை தேர்ந்தெடுக்க முடியும். மேலும், இந்த தன்னார்வலர்கள் தாங்கள் முந்தைய தவணைகளில் பெற்ற நிதியை சமர்ப்பிக்க வேண்டியதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுளளது.

இதையும் வாசிக்க: பட்ஜெட் 2023.. PM-KISAN திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!

அதன்படி. பி.எம்.கிசான் வலைதளத்தில், surrender PM Kisan benefit என்ற புதிய பகுதி உருவாக்கப்படும்.  ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க OTP எண்ணை சமர்ப்பிப்பது மூலம் உங்களுக்கான நிதி உதவியை ஒப்படைக்கலாம். நித உதவியை ஒப்படைத்த விண்ணப்பதாரர்களுக்கு, " வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டீர்கள். இந்த தேசம் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறது" என்ற குறுந்தகவல் உங்கள் திரையில் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: PM Kisan