முகப்பு /செய்தி /வணிகம் / குட் நியூஸ்! விவசாயிகளுக்கான உதவித்தொகை ₹2000 பிப். 27 அன்று டெபாசிட்.. பிரதமர் தொடங்கி வைக்கிறார்.!

குட் நியூஸ்! விவசாயிகளுக்கான உதவித்தொகை ₹2000 பிப். 27 அன்று டெபாசிட்.. பிரதமர் தொடங்கி வைக்கிறார்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

PM Kisan Update : 8 கோடி விவசாயிகளுக்குப் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் 13வது தவணை பிப்ரவரி 27 தேதி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் பிப்ரவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அதாவது பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தில் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்தின் 13வது தவணைக்கான விவசாயிகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை சுமார் 8 கோடி விவசாயிகளுக்குப் பிப்ரவரி 27 ஆம் நாள் 3 மணிக்குப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 13வது தவணைத் தொகை வெளியிடுவதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ரூ.2000 செலுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் நிதியை வழங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்து, விவசாயிகளிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள https://pmevents.ncog.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Agriculture, PM Kisan, PM Modi