விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களை தருவதற்காக மொபைல் செயலி நடத்திவரும் தமிழ்நாட்டு இளைஞர் செல்வ முரளியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த செல்வ முரளி, பி.எஸ்சி கணிணி அறிவியல் படித்துள்ளார். இவரது தந்தை விவசாயப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். ஆனாலும், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. தனது தந்தையும், அவருக்கும் வேளாண் பொருட்களை தரும் விவசாயிகளும் லாபம் கிடைக்காமல் துயரப்படுவதைக் கண்ட செல்வ முரளி, விவசாயம் இன் தமிழ் என்னும் மொபைல் செயலியை 10 வருடங்களுக்கு முன்பு உருவாக்கினார். விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை புள்ளிவிவரங்களுடன் அந்த செயலியில் பதிவேற்றி வந்தார்.
தற்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் அக்ரிசக்தி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவதோடு, மின்னிதழையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆப் டெவலப்பர்கள் 100 பேரை கூகுள் தேர்வு செய்து 6 மாத கால பயிற்சியளித்தது. இந்த 100 பேரில் ஒருவராக பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து கூகுள் நிறுவனத்தில் இருந்து திடீரென செல்வ முரளிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை ஏற்று கடந்த 18ஆம் தேதி டெல்லி சென்ற அவர், அங்குள்ள ஒபராய் ஹோட்டலில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தும் செல்வ முரளியின் முயற்சிக்கு சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் பதிவிற்கு கெத்தாக ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை
இதுகுறித்து செல்வ முரளி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சுந்தர் பிச்சையை சந்தித்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அக்ரி சக்தி பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? விவசாயத்திற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது, விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை எங்கே பயன்படுத்தலாம் உள்ளிட்டவற்றை என்னிடம் கேட்டார்.
It is a great moment in my life.
Mr. Sundar Pichai, CEO of Google, met last Sunday and what is Agrisakthi doing? .What is needed for agriculture? Where can artificial intelligence be used in agriculture? . Really its great conversation, one important th…https://t.co/RWkQShIRXM
— in.selvamurali (@selvamurali1) December 23, 2022
இது சிறந்த உரையாடலாக அமைந்தது. முக்கியமாக எங்களின் உரையாடல் முழுக்க முழுக்க தமிழிலேயே இருந்தது. அவரை சந்திக்கும் அனுபவம் எனக்கு த்ரில்லராகவே இருந்தது. ஆனால், அவருடைய இயல்பான அணுகுமுறை என்னுடைய டென்ஷனை குறித்து அவரிடம் சகஜமாக உரையாட உதவியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers