முகப்பு /செய்தி /வணிகம் / மாத்தியோசி : கர்நாடக விவசாயி கண்டுபிடித்த ’Tree Bike' - ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

மாத்தியோசி : கர்நாடக விவசாயி கண்டுபிடித்த ’Tree Bike' - ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

கர்நாடக விவசாயி

கர்நாடக விவசாயி

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 51 வயது விவசாயி ஒருவர் தென்னை மரங்களில் ஏறும் வகையிலான சாதனம் ஒன்றை வடிவமைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

நமது தேவைதான் புதிய பொருளை கண்டுபிடிப்பதற்கான உந்து சக்தி. நமது தேவையின் அடிப்படையில் தான் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகின்றன. நமது வசதிக்காக என்னவெல்லாம் செய்யலாம் என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவர் அதற்கான கருவியை சாத்தியமாக்கி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்களின் வரிசையில் இணைந்துள்ளார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோமலே கணபதி பட் என்ற 51 வயது விவசாயி.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா பகுதியை சேர்ந்தவர் கோமலே கணபதி பாட். இவருக்கு 51 வயதாகிறது. கடந்த 2019ம் ஆண்டு இவர் ஷெர்வின் மேபன் என்ற எஞ்சினியரிங் நிறுவனத்தின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியிருந்தார். மரங்களில் வேகமாக ஏறுவதற்கு இந்த கருவி உதவி செய்யும். எனவே பலரின் கவனத்தையும் இந்த கருவி ஈர்த்தது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூட, இந்த கருவியால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

இதை தொடர்ந்து இந்த கருவியை இன்னும் நன்றாக மேம்படுத்தும்படி, கோமலே கணபதி பாட்டிற்கு நிறைய பேர் ஆலோசனைகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து விடா முயற்சி செய்து தனது கண்டுபிடிப்பை மெருகேற்றியுள்ளார் கோமலே. பல்வேறு சிறப்பம்சங்களை செய்து இப்போது 'ட்ரீ பைக்' என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறார் அவர். தென்னை விவசாயம் செய்பவர்களுக்கு இந்த மரம் ஏறும் பைக் வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த மரம் ஏறும் பைக்கின் எடை 45 கிலோ ஆகும். எனினும் ட்ராலி மூலம் இதனை மிக எளிதாக இடம் மாற்றலாம். இந்த மரம் ஏறும் பைக், பெட்ரோல் மூலம் இயங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில், 70 முதல் 80 மரங்கள் வரை ஏற முடியும். அதோடு,  இந்த மரம் ஏறும் பைக், 360 டிகிரி கோணத்தில் சுழலும். இந்த மரம் ஏறும் பைக்கை, பாக்கு மரம் மற்றும் தென்னை மரங்களில் பயன்படுத்த முடியும். அத்துடன் மாம்பழம் மற்றும் பலாப்பழங்களை பறிக்கவும் முடியும். இப்போதெல்லாம் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக மரம் ஏறுவது போன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லை.

இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பை விவசாயிகள் பெரிதும் வரவேற்றள்ளன. இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட இந்த மரம் ஏறும் பைக்கை தனியாகவே பயன்படுத்த முடியும் எனவும் கோமலே கணபதி பாட் தெரிவித்துள்ளார். இந்த மரம் ஏறும் பைக்கிற்கு கர்நாடக மாநில அரசு 43 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. எனவே இந்த சாதனத்தை வெறும் 1.12 லட்ச ரூபாய்க்கு வாங்கிவிடலாம்.

First published:

Tags: Agriculture, Farmers