முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023.. PM-KISAN திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!

பட்ஜெட் 2023.. PM-KISAN திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023 - 2024ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது என்னவென்றால் PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணை நிதியை மத்திய அரசு அதிகரிக்கலாம் என்பது தான். விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000, அவர்களின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிதி உதவி தொகையை ரூ.2000 அதிகரித்து ஆண்டுக்கு ரூ.8000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிட்டால் தற்போது 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 சம தவணைகளில் தலா ரூ.2,000 வழங்கப்படுவதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒருமுறை 4 தவணைகளில் ரூ.8,000 நிதி உதவி விவசாயிகளுக்கு வழங்கப்படலாம் என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 13-ஆம் தவணை ஜனவரி இறுதிக்குள் வரவு வைக்கப்பட கூடும். ஆனால் இதுவரை சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13-வது தவணை நிதியை சுமார் 13 கோடி விவசாய குடும்பங்கள் பெறும் என கூறப்படுகிறது. எனினும் விவசாய குடும்பங்கள் இந்த நிதியுதவியை பெறுவதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். e-KYC உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள விவசாயிகள் மட்டுமே விரைவில் வழங்கப்பட உள்ள 13-ஆம் தவணை நிதியை பெற முடியும் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு மத்திய அரசு இதே நடவடிக்கையை பரிசீலித்த போது உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல்களை மனதில் வைத்து அரசு செயல்படுவதாக பேச்சு எழுந்தது. புகார்களை மீறி கடந்த ஆண்டே விவசாயிகளுக்கான நிதி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே இந்த பட்ஜெட்டில் கட்டாயம் அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, PM Kisan, PM Narendra Modi, Union Budget 2023