பிரதான் மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் திருவாரூர் -I,வேலூர், மயிலாடுதுறை, ஈரோடு, தஞ்சாவூர் - II,நாமக்கல், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராமநாதபுரம் - I, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கீழே வருமாறு :-
மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெணி ஆஃப் இந்தியா லிட் (AIC) ராபி (இகச பயிர்கள் 2022-23 பருவத்தில் கீழ்க்கண்ட 11 மாவட்டங்களில் PMFBY (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது. திருவாரூர்.1, வேலூர், மயிலாடுதுறை, ஈரோடு, தஞ்சாவூர்-11. நாமக்கல், கன்னியாகுமரி செங்கல்பட்டு, திருவண்ணாமலை. ராமநாதபுரம்-1. திண்டுக்கல், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகையாக (காப்பீட்டு கட்டணம்), உணவு தானியப் பயிர் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 1.5%, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு 5% அல்லது அக்சூரியல் பிரிமியம் ரேட் இது இரண்டில் எது குறைவோ அதைச் செலுத்த வேண்டும்.
பயிர்க் காப்பீடு செய்யப்படும் பயிர்கள்:
நெல் III,எள், பருத்தி III, நெல் தரிசு பருத்தி, கரும்பு.
வங்கிக் கடன் பெற்ற விவசாயிகள்:
கடன்பெறும் விவசாயிகளின் காப்பீட்டு பிரீமியத்தை விவசாயக் கடன் அளித்த வங்கிகளே காப்பீடு நிறுவனத்திற்குச் செலுத்தி காப்பீடு செய்யவேண்டும். கடன்பெறும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்வதற்காகத் தனியாக விண்ணப்பப்படிவம் / ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை. இத்திட்டத்தில் சேர்வதற்கான தெரிவு செய்யப்பட்ட பகுதி, பயிர்கள், காப்பீடுத் தொகை, பிரீமியம் கட்டணம் மற்றும் கடைசி தேதி குறித்த தகவல்களை மண்டல அலுவலகம் / தங்களுக்கு அருகில் இருக்கும் வேளாண்மைத்துறை அலுவலகம் / பொதுச்சேவை மையம் (CSC) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் (PACS) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிக்கடன் பெறா விவசாயிகள்:
கடன்பெறா விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி / பொதுச் சேவை (CSC) மையத்தில் வேண்டிய ஆவணங்களை சமர்பித்து. பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். கடன்பெறா விவசாயிகளுக்கு செயல்பாட்டிலிருக்கும் மின்னணு பரிமாற்றசேவை உள்ள ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். பயிர் காப்பீட்டின் போதும். இதே வங்கி கணக்கு எண்ணை மத்திய அரசின் காப்பீட்டு இணையதளத்திலும் குறிப்பிடவும்.
வங்கிக்கடன் பெறா விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
முன்மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம், வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC தகவல்களுடன் கூடிய பாஸ்யுக்கின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா, நடப்பாண்டு அடங்கல் மற்றும் ஆதார் அட்டை நகல் போன்றவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பயிர் காப்பீடு செய்யக் கடைசி நாள் :
மாவட்டம் | பயிர் | தேதி |
திருவாரூர் I | நெல் III | 15.03.2023 |
எள் | 15.03.2023 | |
நெல் தரிசு பருத்தி | 31.03.2023 | |
கரும்பு | 31.03.2023 | |
வேலூர் | கரும்பு | 31.03.2023 |
மயிலாடுதுறை | நெல் III | 15.03.2023 |
பருத்தி III | 31.03.2023 | |
நெல் தரிசு பருத்தி | 31.03.2023 | |
கரும்பு | 31.03.2023 | |
ஈரோடு | கரும்பு | 31.03.2023 |
தஞ்சாவூர் III | நெல் III | 15.03.2023 |
நாமக்கல் | பருத்தி III | 15.03.2023 |
கரும்பு | 31.03.2023 | |
செங்கல்பட்டு | கரும்பு | 31.03.2023 |
திருவண்ணாமலை | கரும்பு | 31.03.2023 |
திண்டுக்கல் | கரும்பு | 31.03.2023 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmers