பட்ஜெட் மீதான முதலீட்டாளர்களின் அதிருப்தியால் இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 2.70 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 0.03 சதவீதம் உயர்ந்து 38,730.82 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 0.02 சதவீதம் சரிந்து 11,555.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
மும்பை பங்குச்சந்தையை பொருத்தவரையில் ரியாலிட்டி, ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், டெலிகாம், கட்டுமானம், வங்கி துறை பங்குகள் லாபத்துடமும், ஆட்டோமொபைல், நிதி, ஐடி துறை சார்ந்த பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி இருந்தன.
லாபம் அளித்த டாப் 5 பங்குகள்:
பஜாஜ் ஃபினான்ஸ், சன் பார்மா, ஹீரோ மோட்டோ கார்ப், எல்&டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சர்வதேச அளவில் இருந்து வந்த வர்த்தக போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில் பிரெனெட் கச்சா எண்ணெய் விலை 0.19 சதவீதம் சரிந்து பேரல் 64.11 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களிலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.