Home /News /business /

விரைவில் பிரான்சில் ஏற்று கொள்ளப்பட உள்ள இந்தியாவின் Rupay கார்டுகள் மற்றும் UPI..!

விரைவில் பிரான்சில் ஏற்று கொள்ளப்பட உள்ள இந்தியாவின் Rupay கார்டுகள் மற்றும் UPI..!

UPI

UPI

Rupay Card and UPI | இந்தியாவின் UPI மற்றும் RuPay கார்டுகள் விரைவில் பிரான்சில் ஏற்று கொள்ளப்படும். இது எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பகுதிகளிலும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு (cashless transactions) வழி வகுக்கும்.

    சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு பிறகு, இந்தியாவின் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மற்றும் ரூபே கார்டுகளின் (RuPay cards) சேவைகள் விரைவில் பிரான்சில் கிடைக்க போகிறது.

    இது தொடர்பாக பிரான்சில் உள்ள இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் கூறுகையில், இந்தியாவின் UPI மற்றும் RuPay கார்டுகள் விரைவில் பிரான்சில் ஏற்று கொள்ளப்படும். இது எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற பகுதிகளிலும் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு (cashless transactions) வழி வகுக்கும். நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மற்றும் இன்டர்நேஷனல் அண்ட் லைரா நெட்வொர்க் ஆஃப் பிரான்ஸ் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம் பிரான்சில் UPI-ஐ அறிமுகப்படுத்துவதற்கான செயல்முறையை இந்தியா தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ஜாவேத் அஷ்ரப், "நான் சிங்கப்பூரில் தூதராக இருந்த போது, சிங்கப்பூரில் Bhim QR மற்றும் RuPay கார்டை அறிமுகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு, அந்த முயற்சி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இப்போது அங்கே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் UPI பேமென்ட்ஸ் மற்றும் ரூபே கார்டுகளை ஏற்றுக்கொள்கின்றன. ஐரோப்பாவிலும் இதை செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பிரான்சில் UPI மற்றும் RuPay கார்டு சேவைகளை விரைவில் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பாக பிரான்சில் உள்ள மத்திய வங்கி, கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். பிரான்சில் UPI சேவை மற்றும் RuPay கார்டுகள் சேவை கிடைத்தால் இந்திய சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டிற்குச் செல்லும் போது தடையின்றி பணம் செலுத்த முடியும் என்றார்.



    இதனிடையே இந்தியா ஒரு மாதத்தில் 5.5 பில்லியன் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. பிரான்ஸுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நமக்கு ஒரு பெரிய சாதனை என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி இருக்கிறார். டிஜிட்டல் பேமென்ட்ஸ் பயன்பாடு பிரான்சில் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இது ஒருங்கிணைக்கப்பட வேண்டும் மற்றும் தடையற்றதாக இருக்க வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதன் மூலம் பிரான்சில் நிலைமை மாறலாம் என்றார் ஜாவேத் அஷ்ரப். இதனிடையே தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ள ஜாவேத், பிரான்சில் ஒருமுறை கேஷ் மற்றும் செக் இல்லாமல் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்று விட்டதாகவும் ஆனால் அவரோ கட்டணத்தை கேஷ் அல்லது செக் மூலம் செலுத்த கூறியதால் டாக்டருக்கு பணம் கொடுக்க ஏடிஎம்-மிற்கு செல்ல வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார்.

    Also Read : வீட்டுக் கடன் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!

    UPI பிரான்சுக்கு வந்தால், அது பிரான்ஸ் மக்களுக்கு நன்மை பயக்கும். UPI-யின் பலன்களை பிரான்ஸ் மக்களுக்கு எடுத்து கூறினால் அவர்கள் அதை ஏற்று கொள்வார்கள் என்றார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: France, UPI

    அடுத்த செய்தி