Home /News /business /

அடிதூள்... ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரிப்பு... எவ்வளவு தெரியுமா? 

அடிதூள்... ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் அதிகரிப்பு... எவ்வளவு தெரியுமா? 

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த சமயத்தில், மீண்டும் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த சமயத்தில், மீண்டும் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ, இப்போது ஐசிஐசிஐ என அடுத்தடுத்த வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதம் 20 முதல் 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும். இந்த வட்டி உயர்வு மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்திருந்தது. தற்போது எந்த வகையான வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது என பார்க்கலாம்.

சமீபத்தில், தனியார் வங்கிகள், 2 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்பு முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. வங்கி தற்போது ரூ.2 கோடிக்கு மேல் என்று இருந்ததை தற்போது முதலீடு செய்வதற்கான வட்டி விகிதத்தை ரூ.5 கோடிக்கு குறைவான தொகை என அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ தனது வாடிக்கையாளர்களை பிக்சட் டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 2 கோடிக்கு மேல் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. 2 கோடி ரூபாய்க்கு மேல் 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 4.6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  உங்கள் பெற்றோருக்கான சிறந்த மூத்த குடிமக்கள் காப்பீடைப் பெறுவது எப்படி?

உதாரணமாக, ஐசிஐசிஐ இப்போது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய பிக்சட் டெபாசிட்களுக்கு 4.6 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான முதிர்வு காலத்துடன் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 4.50 சதவீத வட்டியை வருமானமாக பெறலாம். மேலும், 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 4.15 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியில் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு பிக்சட் டெபாசிட் செய்தால், 2.5 சதவீதம் முதல் 3.7 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.

15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்களுக்கு 4.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதற்கு நேர்மாறாக, முதலீட்டாளர்கள் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்களுக்கு 4.3 சதவீத வட்டி விகிதமே வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ எப்போதும் தனது வழக்கமான வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களையே வழங்குகிறது. தற்போது ஐசிஐசிஐ வங்கியின் திருத்தப்பட்ட பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மார்ச் 10, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ALSO READ |  புதிய வாடிக்கையாளர்களை இனி இணைக்க கூடாது.. பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியைத் தவிர, பல்வேறு தனியார் வங்கிகள் பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளனர். எச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளும் அடங்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: ICICI Bank

அடுத்த செய்தி