முகப்பு /செய்தி /வணிகம் / ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன சி இ ஓ ராஜினாமா!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன சி இ ஓ ராஜினாமா!

வினய் தூபே

வினய் தூபே

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி சிக்கலில் முடங்கியுள்ள நிலையில் அதன் முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.

இன்று ஜெட் ஏர்வேஸ் துணை நிர்வாக அதிகாரி மற்றும் மூத்த நிதி அதிகாரி இருவரும் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி வினய் தூபேவும் ராஜினாமா செய்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸின் தலைமை நிதி அதிகாரி அமித் அகர்வால் திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து வினய் தூபே ராஜினாமா செய்துள்ளார்.

வினய் தூபே ராஜினாமா குறித்து பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் நிதி சிக்கலால் முடங்கியுள்ள நிலையில் அதன் பல முக்கிய இயக்குநர்களும் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways