ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளை மையமாகக் கொண்ட இரண்டு புதிய குறியீட்டு நிதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் குறியீட்டு நிதியான நிஃப்டி மிட்கேப் 150 இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது நிஃப்டி மிட்கேப் 150 TR (Total Return) குறியீட்டைக் கண்காணிக்கும் ஒரு ஓபன்-எண்டட் திட்டமாகும். மற்றொரு குறியீட்டு நீதியான நிஃப்டி ஸ்மால் கேப் 50 இன்டெக்ஸ் ஃபண்ட் என்பது நிஃப்டி ஸ்மால் கேப் 50 TR குறியீட்டைக் கண்காணிக்கும் ஒரு ஓபன்-எண்டட் திட்டமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு திட்டங்களும் மார்ச் 26ம் தேதியோடு முடிவடைய உள்ளதாகவும் ஃபண்ட் ஹவுஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி தலைமை நிர்வாகி ஏ பாலசுப்பிரமணியன் கூறுகையில், "ஒரு பரந்த அடிப்படையிலான சந்தை பேரணி, மிட் மற்றும் ஸ்மால் கேப்களை விஞ்சுவதற்கு இது சாதகமான காலமாகும். இப்போது காணப்படுகின்ற சுழற்சியின் மீட்சி மேலும் மிட் மற்றும் ஸ்மால் கேப்களை அமைக்க ஒரு கட்டத்தை அமைக்கிறது. அத்துடன் அவை உள்நாட்டு பொருளாதாரத்திற்கு அதிக வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன.
இந்த புதிய இரண்டு குறியீட்டு நிதிகள் முதலீட்டாளர்களுக்கு பரந்த சந்தை வாய்ப்புகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கின்றன. அதிக வளர்ச்சி கொண்ட மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் நுழைய விரும்புவோருக்கு, மிட் மற்றும் ஸ்மால் கேப் இடைவெளிகளில் உள்ள குறியீட்டு நிதிகள் குறைந்த செலவின் நன்மையுடன் குறைந்த ஆபத்து மாற்றீட்டை வழங்க முடியும்," என்று விளக்கியுள்ளார்.
இதுதவிர ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சியின் ஆரம்ப பொது சலுகையை (initial public offering - IPO) ஆராய்வதற்கு அதன் வாரியம் கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது என்று ஆதித்யா பிர்லா கேபிடல் கடந்த புதன்கிழமை (மார்ச்17) அன்று தெரிவித்துள்ளது. ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளர் ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட், ஆதித்யா பிர்லா குழுமத்திற்கும் கனடாவின் சன் லைஃப் பைனான்சியல் இன்க் நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
இது குறித்து ஆதித்யா பிர்லா கேபிடல் ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, "சந்தை நிலைமைகள், பொருந்தக்கூடிய ஒப்புதல்களைப் பெறுதல் மற்றும் பிற பரிசீலனைகளுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பொருள் துணை நிறுவனமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏஎம்சியின் ஆரம்ப பொது சலுகையை (IPO) ஆராய அதன் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது ”என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் நிறுவனம் இதுகுறித்து வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.