குமார் மங்கலம் பிர்லா பதவி விலகியதை தொடர்ந்து வோடபோன் - ஐடியா பங்குகள் கடும் சரிவு

குமார் மங்கலம் பிர்லா

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து குமார் மங்கலம் பிர்லா பதவி விலகியதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.

 • Share this:
  வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களை இணைந்து உருவாக்கப்பட்டது 'வோடபோன் - ஐடியா'. இந்த நிறுவனத்தில் வோடபோனுக்கு 44 சதவீத பங்குகளும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனத்துக்கு 27 சதவீத பங்குகளும் உள்ளன. 28 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். தொலைத் தொடர்பு துறையில் எழுந்த போட்டியின் காரணமாக நிறுவனங்கள் லாபத்தினை மறந்து, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சலுகைகளை வாரி வழங்கின.

  இதனால் எழுந்த பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வருவாய் பங்கு வடிவத்தில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறை அறிவித்தது. இதன் படி மத்திய அரசுக்கு வோடபோன் - ஐடியா நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும். மேலும் மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 310 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் உள்ளது.

  Also Read : சொந்த வீடு கனவை நிஜமாக்குங்கள்... ஹோம் லோன் வாங்குவது ரொம்ப ஈஸி!

  கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனத்தை காப்பாற்ற தனது 27 சதவிதிக பங்குகளை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றி விட தயார் என குமார் மங்கலம் பிர்லா அறிவித்திருந்தார். எனினும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் செயல்பாடற்ற தலைவர் மற்றும் செயல்பாடற்ற இயக்குநர் பதவிகளிலிருந்து பிர்லா விலகியுள்ளார்.

  இதனை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புக்கொண்டு, ஹிமான்ஷு கபானியாவை பிர்லாவின் இடத்தில் நியமனம் செய்துள்ளனர். ஹிமான்ஷு கபானியா, பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லூலரின் செயல் தலைவராக இருந்தவர். அதோடு ஆதித்யா பிர்லா குழுமத்தின் பரிந்துரைக்கப்பட்ட சுஷில் அகர்வால் கூடுதல் இயக்குனராக நியக்கமிட்டுள்ளார்.

  Also read : வீட்டிலிருந்தபடியே வேலை.. மாதம் நல்ல வருமானம் கொட்டும் பெண்களுக்கான தொழில்கள்!

  குமார மங்கலம் பிர்லாவின் பதவி விலகலை தொடர்ந்து வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்சில் 24 புள்ளி 54 சதவீத சரிவை கண்டது. இது கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும். தேசிய பங்குச் சந்தை நிஃப்டியிலும் வோடபோன் - ஐடியா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: