ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் 4.285 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீல் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்த ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த சில வாரங்களாக உலக அளவிலுள்ள முன்னணி முதலீட்டு நிறுவனங்களிலிருந்து 37,710 கோடி ரூபாயை முதலீடாக கவர்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில்வர் லேக், ஜென்ரல் அட்லாண்டிக், முபாடாலா, ஜி.ஐ.சி, கே.கே.ஆர், டி.பி.ஜி, ஏ.ஐ.டி.ஏ(அபுதாபி முதலீட்டு நிறுவனம்) ஆகிய நிறுவனங்களிலிருந்து கடந்த நான்கு வாரங்களில் இந்த முதலீட்டைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ‘ஏ.ஐ.டி.ஏ நிறுவனத்தில் முதலீடு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சர்வதேச அளிவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மிகச்சிறந்த பின்னணியையக் கொண்டுள்ள நிறுவனத்தின் மூலம் நாங்கள் பலனடைவோம் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 12,000 கடைகளின் மூலம், 64 கோடி மக்களின் சில்லறை வர்த்தகப் பொருள்களை விற்பனை செய்துவருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அமேசான், வால்மார்ட்டுக்கு போட்டியாக ஜியோமார்ட்டை தொடங்கியது. சமீபத்தில், 620 கோடி ரூபாய் முதலீடு செய்து நெட்மெட்ஸின் அதிகபட்ச முதலீட்டை வாங்கி ஆன்லைன் மருத்துவ விற்பனையிலும் களமிறங்கியுள்ளது. அபுதாபி நாட்டு அரசுக்கு சொந்தமான அபுதாபி முதலீட்டு ஆணையம் 1976 ஆண்டு தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் முதலீடுகளை மேற்கொள்ளவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனமாகும்.