Home /News /business /

ஆன்லைனில் தொடங்கிய 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம்.. ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்பு.!

ஆன்லைனில் தொடங்கிய 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம்.. ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்பு.!

5G bidding

5G bidding

5G Spectrum Auction | இந்தியாவில் தற்போது 4ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஆன்லைனில் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, அதானி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

    தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 4ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான ஏலம் ஆன்லைனில் இன்று தொடங்கியது.

    4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை பங்கேற்றன.



    அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், முதல் நாளான இன்று மாலை 6 மணி வரை 4 சுற்றுகள் நடைபெற்றதாகவும் நாளை புதன்கிழமை மீண்டும் ஏலம் நடைபெற்று 5-வது சுற்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Selvi M
    First published:

    Tags: 5G technology, India

    அடுத்த செய்தி