வழக்கமாக புதிய நிதியாண்டில் அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் மற்றும் அதன் மீதான வரிகள் உயரும் என்பதால் நம்முடைய வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகரிக்கும். இன்று முதல் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு துவங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் கார்கள் மற்றும் பைக்குகள் மற்றும் நம் அன்றாட வாழ்விற்கு தேவையான பல பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.
ஏப்ரல் 1, 2022 (இன்று) முதல் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதால் கார்கள் மற்றும் பைக்குகள் விலை அதிகமாக இருக்கும். எஃகு, அலுமினியம் மற்றும் பிற உலோகங்கள் போன்ற பொருட்களின் விலை உயர்வு, பிற மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக கார்களின் விலையை கார் தயாரிப்பாளர்கள் உயர்த்த உள்ளனர். டாட்டா மோட்டார்ஸ், சுசுகி, டொயாட்டோ, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தாக்கல் கார்களின் விலையை உயர்த்தி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு உள்ளன. தொற்றுகட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் புதிய அலை ஏதும் தோன்றாவிட்டால் இந்த புதிய நிதியாண்டு பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும்.
இன்று முதல் புதிய நிதியாண்டில் முதல் மாதமான ஏப்ரல் மாதம் தொடங்குவதால் பால், மின்சாரம், கார், பைக், விமான கட்டணம், ஸ்மார்ட் போன் என எல்லாவற்றின் விலையும் உயர்ந்ததாக இருக்கும். டூ வீலர்கள், கார்களின் விலை மட்டுமின்றி டிவி, ஏசி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலையும் உயரும் என தெரிகிறது. வீட்டு உபயோக பொருட்களின் விலை சுமார் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விலையேற போவதாக் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக ஏசி மற்றும் ஃபிரிட்ஜின் விலை உயர இருக்கிறது.
Also Read : பான் மற்றும் ஆதார் எண் இணைப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
ஒரு யூனிட் ஏசி-யின் விலை ரூ.1500 முதல் ரூ.2000 வரை அதிகரிக்க கூடும் என தெரிகிறது. இவற்றுக்கிடையே உள்நாட்டு விமானங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 சதவீதம் உயர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக விமானத்தில் பயண கட்டணத்தின் விலையும் உயர இருக்கிறது. அதே போல பால் விலையை உயர்த்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளதால், பால் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தை பொறுத்த வரை மின்சார கட்டணத்தை 9 முதல் 10 சதவீதம் வரை அம்மாநில அரசு அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. இவை தவிர ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலையை அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.