Home /News /business /

செல்வமகள் திட்டத்திற்கு பெற்றோர்களிடம் பெருகும் ஆதரவு: கணக்கு தொடங்குவது எப்படி?

செல்வமகள் திட்டத்திற்கு பெற்றோர்களிடம் பெருகும் ஆதரவு: கணக்கு தொடங்குவது எப்படி?

செல்வமகள் திட்டம்

செல்வமகள் திட்டம்

குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம். வட்டிக்கு வரியில்லை, வருமான வரிச்சட்டத்தின் 80வது பிரிவின் கீழ், வருமான வரி தள்ளுபடி கிடைக்கும் என பல்வேறு நன்மைகள் இத்திட்டத்தில் உள்ளது.

    செல்வமகள் திட்டத்திற்கு பெற்றோர்களிடம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. இந்த திட்டத்தின் கீழான மொத்த வைப்புத்தொகை கடந்த 5 ஆண்டுகளில் 310% அதிகரித்துள்ளது.

    சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது.  இந்த திட்டத்தில் கீழான சேமிப்பு ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  2015-16ம் ஆண்டில் 65,78,459 பயனாளர்கள் இத்திட்டத்தில் இணைந்தனர். ரூ.6,901.99 கோடி சேமிப்பு செலுத்தப்பட்டது.

    2016-17ம் ஆண்டில் 30,45,282 பயனாளிகள்; ரூ.9,919.45 கோடி சேமிப்பு, 2017-18ம் ஆண்டில் 23,44,758 பயனாளிகள்; ரூ.12,933.76 கோடி சேமிப்பு, 2018-19ம் ஆண்டில் 31,05,507  பயனாளிகள்; ரூ.17,213.45 கோடி சேமிப்பு , 2019-2020ம் ஆண்டில் 37,15,207 பயனாளிகள்; ரூ.22,618.72  கோடி சேமிப்பு, 2020-21ம் ஆண்டில் 40,18,344 பயனாளிகள்; ரூ.8,328.59 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.

    கொரோனா காலத்திலும் செல்வமகள் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது, இத்திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.  கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழான மொத்த சேமிப்பு 310 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக 2.45 கோடி பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

    செல்வமகள் திட்டத்தின் சிறப்புகள்

    *பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்கலாம்.

    * குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை சேமிக்கலாம்.

    *வட்டிக்கு வரியில்லை

    *வருமான வரிச்சட்டத்தின் 80வது பிரிவின் கீழ், வருமான வரி தள்ளுபடி கிடைக்கும்.

    * பெண் குழந்தையின் உயர்கல்விக்கு பணம் எடுக்க அனுமதி

    *திருமணத்துக்கு கணக்கை முடித்துக் கொள்ள அனுமதி

    *முதிர்ச்சி காலம், கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 20 ஆண்டுகள்

    அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.  செல்வ மகள் திட்டத்தை தொடங்க வைப்புத் தொகையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்களுடன், பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கணக்கு திறக்கும் நேரத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக வழங்கலாம். று சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Savings, Sukanya Samriddhi Yojana

    அடுத்த செய்தி