நடப்பாண்டில் வணிக வர்த்தகம் வீழ்ச்சியடையும் என கணிப்பு - சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?

நடப்பாண்டில் 9.2% வணிக வர்த்தகம் வீழ்ச்சியடையும் என உலக வர்த்தக அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் வணிக வர்த்தகம் வீழ்ச்சியடையும் என கணிப்பு - சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு?
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 7, 2020, 3:17 PM IST
  • Share this:
ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் மோசமானதாக தெரியவில்லை. இருந்தாலும், வர்த்தக மீட்பு எதிர்பார்த்ததை விட மெதுவாக இருக்கலாம். அதுவே, கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் மீண்டும் உயர்ந்தால் மிகவும் மோசமடையக்கூடும். முன்னதாக இந்த ஆண்டு வர்த்தகத்தில் 12.9% சரிவு ஏற்படும் என்ற கணிப்பை ஜெனீவாவை தளமாகக் கொண்ட வர்த்தக அமைப்பைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கடந்த 6ம் தேதி அன்று திருத்தி வெளியிட்டனர்.

ஐரோப்பா யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய பொருளாதார நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்த போது, அதாவது ஏப்ரல் மாதத்தில் இந்த கணிப்பு முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேம்பட்ட வர்த்தக செயல்திறனைப் பின்பற்றி வெளியிடப்பட்டது. குறிப்பாக சுகாதாரப் பொருட்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கான தேவை அதிகரித்து வரும் காரணத்தால் சரிவில் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.

அதேபோல், உலக வர்த்தக அமைப்பின் கணிப்பாளர்கள் இப்போது அடுத்த ஆண்டு வர்த்தகத்தில் 7.2% உயர்வைக் கணித்துள்ளனர். ஆனால் இது 21.3% பவுன்ஸ் திரும்புவதற்கான ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட கணிப்பை விட மிகவும் குறைவாகவாகவும், அவநம்பிக்கையாகாவும் அமைந்துள்ளது. இந்த முன்னறிவிப்புகள், சேவைகளில் உள்ள வர்த்தகத்தை விலக்கி, வணிகப் பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.


மேலும், நடுத்தர காலத்திக்கான எந்தவொரு மீட்டெடுப்பும் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பின் வலிமையைப் பொறுத்தது என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. ஒருவேளை கொரோனா வைரசின் புதிய பரவல் ஏற்பட்டால் மேற்கண்ட சேவைகள், வணிக பொருட்களின் வர்த்தகங்கள் ஆகிய இரண்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர். இது கூடுதல் ஊரடங்கினை விதிக்க அரசாங்கங்களை கட்டாயப்படுத்தக்கூடும் என்று உலக வர்த்தக அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading