ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு!

ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு!
ஆவின் பால்
  • Share this:
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹28 இருந்து ₹32ஆக, அதாவது லிட்டருக்கு ₹4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.


எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ₹35 இருந்து ₹41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ₹6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது.


First published: August 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்