ஹோம் /நியூஸ் /வணிகம் /

குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் பெறலாம்.. அமலுக்கு வரும் புதிய திட்டம்!

குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் பெறலாம்.. அமலுக்கு வரும் புதிய திட்டம்!

ஆதார்

ஆதார்

குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தும்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  “ஆதார் 12 இலக்கங்கள் கொண்ட எண்“ என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடங்கி அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இன்றிமையாத ஒன்றாக மாறியுள்ளது. வங்கி சேமிப்புக் கணக்கு துவங்குவது முதல் அரசு மானியங்கள், வங்கிக்கடன் பெறுவது என எதை செய்தாலும் ஆதார் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது. குறிப்பாக 650 மாநில அரசு திட்டங்கள் 315 மத்திய அரசு திட்டப் பயனாளிகளை அடையாளம் காணவும், அரசு பலன்களைப் பெறுபவர்கள் தகுதியானவர்களா? என்பதை உறுதிப்படுத்தவும் ஆதார் மட்டுமே பயன்படுத்துகிறது.

  இவ்வாறு மக்களின் இன்றியமையாத மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ள ஆதாரை, பிறந்த குழந்தைகள் முதல் வயதான இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு விரிவுப்படுத்துகிறது.

  இந்த வரிசையில் தான் தற்போது இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் தற்போது பிறப்புச் சான்றிதழுடன் ஆதாரை வழங்கும் நடைமுறை உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் கிடைப்பதற்கான வழிவகை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிறப்பு சான்றிதழுடன் ஆதார் வழங்க காரணம்?

  இந்தியாவில் எங்கு குழந்தைப் பிறந்தாலும் அந்தெந்த மருத்துவமனை மூலமாகவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை உள்ளது. இதன் பின்னர் எப்போது நமக்கு நேரம் கிடைக்கிறதோ? அப்போது தான் ஆதார் அடையாள அட்டை எடுப்பதற்கு பெற்றோர்கள் செல்வார்கள். குறிப்பாக 3 வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு மற்றும் ரேசன் கார்டில் பிறந்த குழந்தையின் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அந்நேரம் தான், சில பெற்றோர்கள் ஆதார் மையங்களைத் தேடி செல்வார்கள்.

  ஹோம் லோனை சீக்கிரமாக முடிக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

  இதன் காரணமாக, கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடியாக இருந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஆதார் கார்டைப் பெறுவதற்கானப் பதிவுகள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான், இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் ஆதார் கார்டை எளிய முறையில் பெறுவதற்கான நடைமுறையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, குழந்தைப் பிறந்தவுடன் பிறப்புச்சான்றிதழுடன் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

  இந்தியாவில் 16 மாநிலங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களில் தற்போது வரை குழந்தைகளுக்கு எடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அவர்களின் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு மக்கள் தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் ப்ராசஸ் செய்யப்படுகிறது. இதன் பிறகு 5 மற்றும் 15 வயது ஆனதும் விரல்கள், கருவிழி மற்றும் முகப் புகைப்படம் என அவர்களின் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Aadhaar card, Aadhar