Aadhar Card தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. வங்கி சேவைகள், வாகனப் பதிவு , அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தடையின்றி பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஆதார் கார்டில் நம்முடைய பயோமெட்ரிக்ஸின் அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் நாம் குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வகையில்
UIDAI-ன் ஆன்லைன் போர்ட்டல் உதவுகிறது.
உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால், நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லலாம். அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் இமெயில் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் இருக்கும் தகவல்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடிக்காத ஒன்று அதிலிருக்கும் நம்முடைய போட்டோ தான். ஆதார் கார்டில் உள்ள போட்டோவை பார்த்து அதிகாரிகளுக்கு சந்தேகம் வருகிறதோ, இல்லையோ நமக்கே சந்தேகம் வருகிறது அதில் இருப்பது நாம் தானா என்று... ஆதார் கார்டில் உங்கள் போட்டோவை மாற்ற நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
Read More : பான் - ஆதார் இணைக்கவில்லையா? அப்போ கட்டாயம் இந்த வழிமுறையை தெரிஞ்சிக்கோங்க...
ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் போட்டோவை வேறு ஒரு நல்ல போட்டோவாக மாற்றுவதற்காக நீங்கள் அப்டேட் செய்ய விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
ஆதார் கார்டிலிருக்கும் போட்டோவை மாற்ற உதவும் படிகள்..
* முதலில் UIDAI-வின் அதிகாரபூர்வ வெப்சைட்டான uidai.gov.in-விற்கு செல்லவும்.
* ஆதார் என்ரோல்மென்ட் ஃபார்மை டவுன்லோட் செய்யவும்.
* ஃபார்மில் உள்ள அனைத்து தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு சென்று இந்த ஃபார்மை சமர்ப்பிக்கவும்.
* அங்கே உங்களது புதிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.
* உங்கள் விவரங்களை அங்கீகரிக்க நீங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும்
* தொடர்ந்து நீங்கள் ஒப்புகை சீட்டு (acknowledgement slip) மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN- Update Request Number) பெறுவீர்கள்.
URN மூலம் உங்கள் ஆதார் கார்டில் செய்ய கோரி உள்ள அப்டேட்டை நீங்கள் கண்காணிக்கலாம். ஆதார் கார்டில் உங்களது புது போட்டோ உடனடியாக மாறிவிடாது. புது போட்டோ ஆதார் கார்டில் அப்டேட்டாக அதிகப்பட்சம் 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் கார்டில் நல்ல போட்டோ வேண்டும் என்றால் நீங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.