பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

டிசம்பர் 31, 2019 உடன் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக இருந்தது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
பான் - ஆதார்
  • News18
  • Last Updated: January 2, 2020, 3:27 PM IST
  • Share this:
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 3 மாதங்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 2020 வரையில் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 31, 2019 உடன் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக இருந்தது. தற்போது இதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2)-யின் அடிப்படையில் ஜூலை 1, 2017 அன்று முதல் 10 இலக்க எண் கொண்ட பான் எண் வைத்திருப்போர் நிச்சயமாக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2019 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்பதற்கான தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

எப்படி இணைப்பது? கிளிக் செய்ய

மேலும் பார்க்க: நாள் ஒன்றுக்கு 20- 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தும் ஏர் இந்தியா..!
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்