Home /News /business /

மார்ச் 31 க்குள் ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இதை செய்து இருக்க வேண்டும்.. இல்லையெனில் அபராதம்!

மார்ச் 31 க்குள் ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இதை செய்து இருக்க வேண்டும்.. இல்லையெனில் அபராதம்!

ஆதார் - பான்

ஆதார் - பான்

aadhaar pan link: பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

    PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மார்ச் 31, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2022 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும். இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT ஆல் அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை, நீங்கள் மார்ச் 31, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

    இதையும் படிங்க.. PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...

    வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

    நீங்கள் இரண்டு வழிகளில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.

    வருமான வரி e-filing தளம் பயன்படுத்தி ஆன்லைனில் இணைக்கலாம்

    ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்தில், முகப்புப் பக்கத்திலேயே ‘link aadhaar’ என்ற இணைப்பு காணப்படும். அதைக் கிளிக் செய்யுங்கள்

    ஸ்டெப் 2: அடுத்த பக்கத்தில், உங்கள் பான் எண், ஆதார் எண், உங்கள் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.

    ஸ்டெப் 3: திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் captcha குறியீட்டை உள்ளிடவும். பின்னர், OTP ரெக்வஸ்ட் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

    ஸ்டெப் 4: ‘Link Aadhar’ என்பதைக் கிளிக் செய்த பின், நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படும்.

    இதையும் படிங்க.. ஆதார் நம்பர் இருந்தால் மட்டும் போதும்.. 10 நிமிடத்தில் பான் கார்டு பெறலாம் தெரியுமா?

    SMS வழியாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது

    ஸ்டெப் 1: உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள்.

    UIDPAN <12digitaadhaar> <10digitpan>

    ஸ்டெப் 2: இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

    நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhaar card, Pan card

    அடுத்த செய்தி