Home /News /business /

Aadhaar - PAN : லிங்க் செய்ய இன்றே கடைசி நாள்.. செய்ய தவறினால் ரூ. 1000 அபராதம்!

Aadhaar - PAN : லிங்க் செய்ய இன்றே கடைசி நாள்.. செய்ய தவறினால் ரூ. 1000 அபராதம்!

ஆதார் - பான்

ஆதார் - பான்

Aadhaar PAN link : SMS வழியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து இணைக்கலாம்

    பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.ஜூன் 30, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு மேற்பட்டு, அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.

    வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே பலமுறை கெடு நீட்டிக்கப்பட்டதால், இன்று இணைக்க தவறுபவர்கள், ஜூலை மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தில் ரூ. 40 லட்சம் சேமிக்கலாம் தெரியுமா?

    வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று CBDT ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வருமான வரி ஆன்லைன் ஃபைலிங் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருந்தால் அல்லது  இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், இ-ஃபைலிங் முகப்புப் பக்கத்தில் ஆதார் மற்றும் பான் இணைக்கும் லிங்க்கைப் பயன்படுத்தலாம்.

    கனரா வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் சூப்பரான திட்டம்..வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

    SMS வழியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து இணைக்கலாம். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள்.

    UIDPAN <12digitaadhaar> <10digitpan> - இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Aadhar, Pan card

    அடுத்த செய்தி