ஹோம் /நியூஸ் /வணிகம் /

புதிய ஆதார் விதிமுறை.. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இதை செய்ய வேண்டும்!

புதிய ஆதார் விதிமுறை.. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இதை செய்ய வேண்டும்!

ஆதார்

ஆதார்

ஆதார் உங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, நாடு முழுவதுமே அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் தொடங்கிவிட்டது.

  அதைத் தொடர்ந்து, ஆதார் எண் சார்ந்து பலவிதமான குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அரசும் புதுப்புது பாதுகாப்பு வழிகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதார் சார்ந்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 10 வருடங்களுக்கு ஒருமுறை உங்களுடைய ஆதார் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  போஸ்ட் ஆபீஸ் முக்கிய சேமிப்பு திட்டத்திற்கு இந்த 3 வழிகளில் பணம் செலுத்தலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க

  கடந்த வியாழனன்று, ஆதார் விதிமுறைகளில் அரசாங்கம் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய மாற்றங்களின் அடிப்படையில் ஆதார் உங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் இருந்து, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்களைப் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையும் படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், ஆதார் என்ரோல்மென்ட் தேதியில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, உங்களுடைய அப்போதைய அடையாள சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிய ஆவணங்களை புதுபிப்பது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது.

  பர்சனல் லோன் வாங்கும் ப்ளான் இருக்கா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

  தற்போது UIDAI உங்களுடைய அடையாளச் சான்றுகளை புதுப்பிக்க ஏற்றுக்கொண்டு வருகிறது. அடையாளச் சான்றில் உங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வழக்கமாக அடையாள சான்றாக நீங்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நீங்கள் சமர்ப்பித்து உங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

  நீங்கள் ஆவணங்களை புதுப்பிப்பதற்காகவே UIDAI இல் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் updatedocument என்ற அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஆன்லைனில் ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

  நீங்கள் உங்களுடைய முகவரியையும் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் உங்களின் வசிப்பிடம் இதை மட்டும் புதுப்பிக்கலாம். உங்களுடைய ரேகை, ஐரிஸ், மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Aadhaar card, Aadhar, Central govt