இந்திய குடிமக்களின் 6 லட்சம் ஆதார் அட்டைகளை UIDAI ரத்து செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய குடிமக்களின் அடையாள அட்டைகளில் மிகவும் முக்கியமானதாக ஆதார் அட்டை விளங்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண்ணைக் கொண்ட ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு திறப்பு, KYC உள்ளீடுகள், இன்சூரன்ஸ் பாலிசிகள், அரசு திட்டங்கள், கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுகிறது.
கடுமையான குற்றங்களைச் செய்ய போலி ஆதார் அட்டைகள் மற்றும் ஆதார் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் UIDAI அவற்றைத் தடை செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. ஆதார் அட்டை மூலம் மோசடி நடப்பதாகவும், போலி ஆதார் அட்டைகள் உருவாக்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சுமார் 6 லட்சம் ஆதார் எண்களை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆதார் எண்கள் அனைத்தும் நகல் அல்லது போலியானவை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளார்.
FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?
மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடரின் போது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், போலி மற்றும் நகல் ஆதார் கார்டுகளால் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதன் ஒருபகுதியாக 598,999 ஆதார் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அவர், இதற்காக, ஆதார் அட்டையில் கூடுதல் சரிபார்ப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால் தொழில்நுட்பம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து புதிய பதிவுகளின் பயோமெட்ரிக் பொருத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் நகல்களை நீக்குவதற்கான புதிய முறையாக (கைரேகை மற்றும் கருவிழியுடன் கூடுதலாக) 'முகம்' அடிப்படையிலான சரிபார்க்கும் அமைப்பும் சேர்க்கப்பட உள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
வட்டி மாறவில்லை.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
அதாவது ஆதார் தரவுகளை சரி பார்க்க கைரேகை மற்றும் கருவிழி சரிபார்க்கப்படுவது போலவே, முகத்தை அடையாளம் காணும் புதிய கருவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போலி ஆதார் வைத்திருக்கிறீர்களா? ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
1: உங்களிடம் உள்ள ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://resident.uidai.gov.in/offlineaadhaar)
2: இதற்கு பிறகு, 'ஆதார் சரிபார்ப்பு' (Aadhaar Verify)சேவை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம், இல்லையெல் ஆதார் நம்பகத்தன்மையை சரிபார்க்க நீங்கள் நேரடியாக https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற இணைப்பிற்கு செல்லலாம்.
3: இதனையடுத்து 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடியை உள்ளிடவும்.
4: எண்ணை உள்ளிட்டு முடித்ததும், திரையில் காட்டப்படும் பாதுகாப்புக் குறியீட்டை டைப் செய்து, ஒன்டைம் பாஸ்வேர்ட் எனப்படும் OTP-யைக் கோரவும்.
5: கொடுக்கப்பட்ட ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடிக்கான OTP ஐ உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறுவீர்கள். இணையதளத்தில் OTPயை உள்ளிடவும்.
6: தற்போது நீங்கள் மற்றொரு பக்கத்திற்கு செல்வீர்கள். அங்கு உங்கள் ஆதார் எண் செல்லுபடியாகுமா? இல்லையா? என்று ஒரு செய்தியைப் பெறலாம்.
7: செய்தியுடன், பெயர், மாநிலம், வயது, பாலினம் மற்றும் பிற விவரங்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண்ணுக்கான திரையில் பிரதிபலிக்கும். இந்த விவரங்கள் அனைத்தும் காட்டப்பட்டால், உங்களிடம் உள்ள ஆதார் எண் உண்மையானது என அர்த்தம்.
இது தவிர, ஆதார் கடிதம்/ eAadhaar/ ஆதார் PVC கார்டில் அச்சிடப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஆதாரை ஆஃப்லைனில் கூட சரிபார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.