இன்டர்நெட் இல்லாமல் SMS மூலம் பெற கூடிய ஆதார் சேவைகள் என்ன?

மாதிரி படம்

யூஸர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

  • Share this:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்காக இன்டர்நெட் / ரெசிடென்ட் போர்ட்டல் / எம்-ஆதார் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் கிடைக்கும் “Aadhaar Services on SMS” என்ற சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. UIDAI அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய சேவையின் மூலம், யூஸர்கள் அடிப்படை எஸ்எம்எஸ் வசதி உதவியுடன் மெய்நிகர் ஐடி உருவாக்கம் (Virtual ID generation) / மீட்டெடுப்பு (retrieval) மற்றும் ஆதார் லாக் / அன்லாக் போன்ற பல்வேறு ஆதார் வசதிகளை பெறலாம்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் சேவைகளை எவ்வாறு பெறலாம்:

யூஸர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒருவர் பெற விரும்பும் சேவைக்கு ஏற்ப அனுப்ப கூடிய எஸ்எம்எஸ் ஃபார்மெட் மாறும். ஆதார் எஸ்எம்எஸ் வசதி மூலம் மேற்கண்டவற்றுடன் யூஸர்கள் பயோமெட்ரிக் லாக்கை எனேபிள் அல்லது டிசேபிள் மற்றும் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாக அன்லாக் செய்ய உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னென்னெ சேவைகளுக்கு எந்த எஸ்எம்எஸ் ஃபார்மெட்கள்:

* மெய்நிகர் ஐடி-யை உருவாக்க (To Generate – Virtual ID):

GVID என்று டைப் செய்து கூடவே உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை சேர்க்க வேண்டும். உதாரணமாக உங்கள் ஆதார் எண் 1234-5678-9123 எனில், GVID 9123 என்று 1947 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

* மெய்நிகர் ஐடி-யை மீட்டெடுக்க (To Retrieve –Virtual ID):

RVID ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

* ஒன் டைம் பாஸ்வேர்ட் பெற (To get OTP):

OTP-ஐ பெற நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த ஃபார்மெட்டைப் பயன்படுத்தவும்: GETOTP ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

OTP ஐப் பெற நீங்கள் மெய்நிகர் ஐடியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த ஃபார்மெட்டைப் பயன்படுத்தவும்: GETOTP மெய்நிகர் ஐடி எண்ணின் கடைசி 6 இலக்கங்கள்

* ஆதாரை லாக் செய்ய (To Lock Aadhaar):

இந்த சேவைக்காக யூஸர்கள் கீழே கொடுக்கப்பட்ட ஃபார்மெட்டில் 2 முறை SMS அனுப்ப வேண்டும்:

SMS 1: GETOTP ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

SMS 2: LOCKUID, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், OTP-யின் 6 இலக்கங்கள்

* ஆதார் எண்ணை அன்லாக் செய்ய இதே போன்ற கீழ்காணும் செயல்முறையை பின்பற்ற வேண்டும்

SMS 1: GETOTP மெய்நிகர் ஐடி-யின் கடைசி 6 இலக்கங்கள்

SMS 2: UNLOCKUID, மெய்நிகர் ஐடி-யின் கடைசி 6 இலக்கங்கள், 6 இலக்க OTP

உங்கள் ஆதார் எண்ணைப் லாக் அல்லது அன்லாக் செய்வதற்கு மெய்நிகர் ஐடி (Virtual ID) முன்பே உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் உங்களால் ஆதார் எண்ணைப் லாக் அல்லது அன்லாக் செய்ய முடியாது. பல சார்புடைய ஆதார் எண்கள் (multiple dependent Aadhaar numbers ) ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், மற்றும் ஆதார் எண்களின் கடைசி 4 இலக்கங்கள் குறைந்தது இரண்டு சார்புடையவர்களுக்கு (two dependents) ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டாவது SMS பின்வரும் ஃபார்மெட்டில் அனுப்பப்பட வேண்டும்:

* லாக் செய்ய:

LOCKUID, ஆதார் எண்ணின் கடைசி 8 இலக்கங்கள், 6 இலக்க OTP

* அன்லாக் செய்ய:

UNLOCKUID, மெய்நிகர் ஐடி-யின் கடைசி 10 இலக்கங்கள், 6 இலக்க OTP

* பயோமெட்ரிக் லாக் எனேபிள் (To Enable Biometric Lock):

1. ஆதார் எண் பயன்படுத்தினால் இந்த ஃபார்மெட்

SMS 1: GETOTP ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

SMS 2: ENABLEBIOLOCK, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், 6 இலக்க OTP

2. மெய்நிகர் ஐடியை பயன்படுத்தினால் இந்த ஃபார்மெட்

SMS 1: GETOTP, மெய்நிகர் ஐடி கடைசி 6 இலக்கங்கள்

SMS 2: ENABLEBIOLOCK, மெய்நிகர் ஐடி கடைசி 6 இலக்கங்கள், 6 இலக்க OTP

ஆதார் லாக் செய்யப்பட்டால் இந்த சேவையைப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பல சார்புடைய ஆதார் எண்கள் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், மற்றும் ஆதார் எண்களின் கடைசி 4 இலக்கங்கள் குறைந்தது இரண்டு சார்புடையவர்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தால், இரண்டாவது SMS பின்வரும் வடிவத்தில் அனுப்பப்பட வேண்டும்.

* ஆதார் பயன்படுத்தி (Using Aadhar): ENABLEBIOLOCK, ஆதார் எண்ணின் கடைசி 8 இலக்கங்கள், 6 இலக்க OTP

ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்கள் மற்றும் மெய்நிகர் ஐடியின் கடைசி 6 இலக்கங்கள் குறைந்தது இரண்டு சார்புடையவர்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தால், இரண்டாவது SMS கீழ்கண்டவாறு அனுப்பப்பட வேண்டும்:

ENABLEBIOLOCK, மெய்நிகர் ஐடி கடைசி 10 இலக்கங்கள், 6 இலக்க OTP

* பயோமெட்ரிக் லாக்கை டிசேபிள் செய்ய (disabling biometric lock):

1. ஆதார் எண் பயன்படுத்தினால்..

SMS 1: GETOTP, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

SMS 2: DISABLEBIOLOCK, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், 6 இலக்க OTP

2. மெய்நிகர் ஐடி(Virtual ID) பயன்படுத்தினால்..

SMS 1: GETOTP, மெய்நிகர் ஐடி-யின் கடைசி 6 இலக்கங்கள்

SMS 2: DISABLEBIOLOCK, மெய்நிகர் ஐடி-யின் கடைசி 6 இலக்கங்கள், 6 இலக்க OTP

* பயோமெட்ரிக்கை தற்காலிகமாக அன்லாக் செய்ய (Temporarily Unlock Biometrics)

1. ஆதார் எண் பயன்படுத்தினால்..

SMS 1: GETOTP, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்

SMS 2: UNLOCKBIO, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், 6 இலக்க OTP

2. மெய்நிகர் ஐடியை பயன்படுத்தினால்..

SMS 1: GETOTP, மெய்நிகர் ஐடியின் கடைசி 6 இலக்கங்கள்

SMS 2: UNLOCKBIO, மெய்நிகர் ஐடியின் கடைசி 6 இலக்கங்கள், 6 இலக்க OTP

Also read... உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? ஆன்லைனில் எவ்வாறு மீட்டெடுக்கலாம்?

ஆதார் லாக் செய்யப்பட்டிருந்தால் இந்த சேவையை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல சார்புடைய ஆதார் எண்கள் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் குறைந்தது இரண்டு சார்புடையவர்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தால், இரண்டாவது SMS ஃபார்மெட் மாறுகிறது:

UNLOCKBIO, ஆதார் எண்ணின் கடைசி 8 இலக்கங்கள், 6 இலக்க OTP

அதே போல், ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட பல சார்பு ஆதார் எண்களும் (multiple dependent Aadhaar Numbers) மெய்நிகர் ஐடியின் கடைசி 6 இலக்கங்களும் குறைந்தது 2 சார்புடையவர்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தால், இரண்டாவது SMS ஃபார்மெட் இவ்வாறு இருக்க வேண்டும்.

UNLOCKBIO, மெய்நிகர் ஐடி-யின் கடைசி 10 இலக்கங்கள், 6 இலக்க OTP



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: