Home /News /business /

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம்!

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமான அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது இதுதான். உங்கள் பயோமெட்ரிக்ஸ் மற்றும் தனிப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியிருப்பதால் இது மிகவும் முக்கியமான ஆவணமாகும்.

வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை புதுப்பிக்க Self Service Update Portal (SSUP) உங்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தைப் பார்வையிட வேண்டும். ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.

முன்னர் ஆதாரில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்த சூழலில் தற்போது, சில மாதங்களாக யுஐடிஏஐ வீட்டில் இருந்தே தேவையான மாற்றங்களை செய்யும் வகையில் மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று தேவையான மாற்றங்களை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.,

1. முதலில் UIDAI- யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

2. நீங்கள் முகப்பு பக்கத்திற்கு வந்தவுடன் கீழ்தோன்றும் மெனுவுக்கு சென்று, 'ஆதார் சேவைகள்' (Aadhaar Services) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர் தோன்றும் திரையில் 'ஆதார் சரிபார்ப்பு' (Aadhaar Verification) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4 . இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்து கேப்ஷாவை உள்ளிடவும்.

5. இப்பொது ‘Submit’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதனை தொடந்து உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என சரி பார்த்து கொள்ளலாம். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை தபின்னர் திருத்தி கொள்ளலாம்.

ஆதாரின் விவரங்கள் ஏன் சரிபார்க்க வேண்டும் தெரியுமா? இந்தியா முழுவதும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட KYC ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. மேலும் ஆதார் அட்டையை PAN உடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இணைக்காதபட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்வது போன்றவற்றில் சிக்கல் ஏற்படும் மற்றும் பான் எண்ணும் முடக்கப்பட்டு விடும் என அறிவித்துள்ளனர். இதனால் ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் வர இருக்கும் முக்கிய திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக இருக்கும் என்பதால் விவரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.

Also read... PM கிசான் நிதி ரூ.6000-க்கு காத்திருக்கிறீர்களா? ஈஸியாக பெற இதோ வழி!

ஆதார் அட்டைக்கு எப்படி பதிவு செய்வது?

புதிய ஆதார் அட்டை பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.,

1) அடையாள சான்று - பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி

2) முகவரி சான்று - பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக்

3) வயது சான்று - பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை

4) திருமணச் சான்று (நீங்கள் திருமணம் செய்திருந்தால்) - நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் போதுமானது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aadhaar card, Aadhar

அடுத்த செய்தி