இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பிரதான ஆவணமாக ஆதார் மாறியுள்ள நிலையில், அதில் உள்ள விவரங்கள் தான் இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, ஆதார் அட்டையில் உள்ள பெயர், வயது, பாலினம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தான் அரசு சேவைகள் மற்றும் சலுகைகளைப் பெறும்போது சரிபார்ப்புப் பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
இன்றைய சூழலில், சில தனியார் சேவைகளுக்கும் கூட ஆதார் கட்டாயமாகியுள்ளது. நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்தெந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வகையான தகவல்கள்
நமது ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் 1. டெமோகிராஃபிக் தகவல் மற்றும் 2) பயோமெட்ரிக் தகவல் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. டெமோகிராஃபிக் தகவலில் நமது பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், இ-மெயில் முகவரி, உறவுமுறை மற்றும் பகிரப்படும் தகவல் ஆகியவை இடம்பெறுகின்றன.
பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள ஃபோட்டோ ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன. ஆதாரில் இடம்பெறும் தகவல்களுக்கும், நம்மிடம் உள்ள இதர ஆவணங்களின் தகவல்களுக்கும் மாறுபாடு இருப்பின் சிக்கல் வரக் கூடும். ஆகவே, தவறுகளை திருத்தி தகவல்களை சரியானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ | ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!
பெயர் மாற்றம் - உங்கள் ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்தை இரண்டு முறை செய்ய இயலும். அதுவும் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பாலின மாற்றம் - நீங்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற விவரத்தை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய இயலும்.
பிறந்த தேதி மாற்றம் - இந்த விவரத்தையும் ஒருமுறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
முகவரி மாற்றம் - உங்கள் முகவரியை மாற்றிக் கொள்வதற்கு எந்த வரைமுறையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இதை மாற்றிக் கொள்ளலாம்.
ALSO READ | குழந்தைகள் வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? ஒருவேளை செய்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும் முழு விபரம்!
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கியம்
உங்கள் ஆதார் தகவல்களை ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், அதைச் செய்வதற்கு உங்களிடம் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம், ஆதார் அட்டை எடுக்கும்போது அல்லது கடைசியாக நீங்கள் அப்டேட் செய்தபோது எந்த மொபைல் எண் பயன்படுத்தியிருந்தீர்கள் என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Aadhar