Home /News /business /

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கலாம்!

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கலாம்!

குழந்தைகளுக்குகான ஆதார் அட்டை திட்டம்.

குழந்தைகளுக்குகான ஆதார் அட்டை திட்டம்.

0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பால ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான வயதுப் பிரிவினரில் 79 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, யுஐடிஏஐ இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

    0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பால ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவதற்கான திட்டத்தின் படியும், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குப் பலதரப்பு பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நாடெங்கிலும் 0 முதல் 5 வயதுப் பிரிவினரில் 2.64 கோடி குழந்தைகளுக்குப் பால ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் ஆதார் பதிவுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் பதிவு

    ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுப் பிரிவினரில் ஏற்கனவே 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு விட்டனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர், மிஸோரம், டெல்லி, ஆந்திரா, லட்சத்தீவுகள் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    Also Read : அரசு வேலை பார்த்த ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வயதில் மட்டும் கூடுதல் பென்ஷன்!

    மண்டல அலுவலகங்கள் மூலமாக ஊக்குவிப்பு

    யுஐடிஏஐ மற்றும் அதன் மண்டல அலுவலகங்கள் மூலமாகக் குழந்தைகளை ஆதார் திட்டத்தில் இணைப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பலன் பெறவும், குழந்தையின் பிறப்பிலிருந்து அதற்கு டிஜிட்டல் ஃபோட்டோ அடையாளம் வழங்கும் வகையிலும் பால ஆதார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பயோமெட்ரிக் தகவல்கள் இடம்பெறாது

    பொதுவாக ஆதார் அட்டையில் ஒருவரது கருவிழி பதிவு, கைரேகை பதிவு போன்ற பயோமெட்ரிக் விவரங்களைச் சேகரிப்பதுதான் மிக முக்கியமான பணியாகும். ஆனால், பால ஆதார் திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் வயதைக் கடந்த பிறகுதான் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    என்னென்ன விவரங்கள் இடம்பெறுகிறது

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் ஆதார் அட்டை எடுக்கும்போது, அவர்களது முகம் படம் பிடிக்கப்படுகிறது. மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பயோமெட்ரிக் விவரம் மூலமாக உறுதித்தன்மை செய்து கொள்ளப்படுகிறது. பால ஆதார் திட்டத்தில் இணையும் குழந்தைகளிடம் இருந்து பிறப்புச் சான்றிதழ் அல்லது உறவுமுறை ஆவணம் போன்றவை பெறப்படுகின்றன.
    Published by:Janvi
    First published:

    Tags: Aadhaar card, Children

    அடுத்த செய்தி