Home /News /business /

உலகளவில் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

உலகளவில் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

 ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்தின் மேல் குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய பொருள் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்தின் தயாரிப்பான குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுத்திய நிலையில் தற்போது உலகளவில் 2023 ஆண்டுடன் விற்பனை நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    பிரபல அமெரிக்கா நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான பிரத்தியேக டால்க் பவுடரை தயாரித்து உலகளவில் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் 38,000 வழக்குகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராகப் போடப்பட்டது. குழந்தைகளுக்கான டால்க் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் உள்ளது என்று கூறப்பட்டுப் போடப்பட்ட வழக்குகளின் தாக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனையை நிறுத்தினர்.

    தற்போது கடந்த வியாழக்கிழமை குழந்தைகளுக்கான டால்க் பவுடர் விற்பனையை உலகளவில் 2023 ஆண்டுடன் நிறுத்துவதாகக் கூறியுள்ளது. 2020இல் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிறுவனத்துக்கு எதிராகப் போடப்பட்டபோதும் அதனை ஜான்சன் & ஜான்சன் முழுமையாக மறுத்தது. புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய கல்நார் (அஸ்பேஸ்டோஸ்) என்ற பொருள் உள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிறுவனம் அதனை மறுத்ததுடன் தங்கள் தயாரிப்பான குழந்தைகளுக்கான பவுடர் பாதுகாப்பானது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் அதிகரிக்கும் வழக்குகளால் நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளது என்று குறிப்பிட்டு உலகளவில் விற்பனையை நிறுத்துகின்றனர். 2018இல் ராய்ட்டர்ஸ்செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய கல்நார் (அஸ்பேஸ்டோஸ்) என்ற பொருள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் நடத்திய ஆய்வில் சிறிதளவிலான கல்நார் குழந்தைகளுக்கான பவுடரில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து அதனை மறுத்து வந்தது. 1894இல் இருந்து ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனம் குழந்தைகளுக்கான டால்க் பவுடரை தயாரித்துக் கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Baby Care, Cancer, Johnson and johnson

    அடுத்த செய்தி