கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைகால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகளுக்காக மொத்த நிதியாதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் நீட்டிப்பிற்கான விரிவான்ச் திட்ட அறிக்கையும், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
Also read... தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நீதிமன்றம் கேள்வி!
மேலும் 6,683 கோடி மதிப்பீட்டில் 44 கி.மீ நீளமுள்ள கோவை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதே போல் போக்குவரத்துத்துறைக்கு அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும், அவற்றில் 2,000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் எனவும், இதற்காக 2021-22 ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, TN Budget 2021