கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அபரிமிதமாக வளர்ந்துவருகிறது. 1000 எடுக்க கூட வங்கிகளுக்கு சென்ற நிலை மாறி 10 ரூபாய் என்றாலும் அதை போனில் இருந்து நொடிப்பொழுதில் காட்டும் நிலை வந்துவிட்டது.
UPI பயன்படுத்தி பணம் பெறுவது, செலுத்துவது, வங்கி இருப்புத்தொகை தெரிந்துகொள்வது சாத்தியமாகியுள்ளது. மேலும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களுக்கு வங்கிகள் தனியாக இணையதளம், செயலி முதலியவற்றை வைத்துள்ளது.
குறுஞ்செய்தி மூலம் வங்கிக்கணக்கு தொகைகளை தெரிந்துகொள்ளவும் வசதிகள் உள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாட்ஸப் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு தற்போது மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது.
எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையை பெறுவது எப்படி?
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையை பயன்படுத்த வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து WAREG என்று பதிவிட்டு அதோடு உங்கள் எஸ். பி.ஐ, வங்கி கணக்கு எண்ணையும் உள்ளிட்டு 917208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp சேவையைப் பயன்படுத்த முடியும்.
அப்படி இல்லையெனில் வாட்ஸ்அப்பில் 909022690226 என்ற எண்ணுக்கு ஹாய் என அனுப்பினால். அதன் பிறகு செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் Chatbot செயல்பட தொடங்கும். அதன் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்தால் வங்கி சேவைகளை வாட்ஸப் மூலமே பெறலாம்.
9 இலவச சேவைகள் :
இனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வாட்ஸப் மூலம் கீழ்கண்ட வசதிகளை இலவசமாக பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.