• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் இணைந்த அசாம்!

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் இணைந்த அசாம்!

பணம்

பணம்

யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசு, தனது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.

  • Share this:
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஜூலை 2021 முதல், 28% அகவிலைப்படி (டிஏ) உயர்வு பெறுவார்கள் என்று 7-வது ஊதியக்குழு முன்பு அறிவித்திருந்தது. இதன்படி முன்பு 17%-ஆக இருந்த அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் கிட்டத்தட்ட 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள் தங்கள் அரசு ஊழியர்களுக்கான டிஏ விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனிடைய ஜூன் மாதத்திற்கான டிஏ தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஜூன் 2021-க்கான டிஏ இன்னும் முடிவுவாகாத நிலையில் டிஏ மேலும் 3% அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எப்போதும் போல அந்த அறிவிவிப்பும் வெளியானால் அரசு ஊழியர்களின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு அடுத்தாண்டு தான் இருக்கும் என நேற்றைய பட்ஜெட் தாக்கலின் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க உறுதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரப்பிரதேசம்:

யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அரசு, தனது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. உபி மாநில அரசின் இந்த அறிவிப்பின் மூலம் அம்மாநிலத்தின் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு -காஷ்மீர் அரசு தனது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 17% உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் நிதித் துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவின் பேரில் 1 ஜூலை 2021 முதல் முறையான ஊதிய நிலைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அசாம்:

முதல்வர் ஹிமான்ட்டா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு, தனது அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28% வரை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹிமான்ட்டா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான டிஏ-வை அதிகரிப்பதென்ற ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து 28% அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதியிட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

Also read... வெறும் ரூ.34 முதலீட்டில் 18 லட்சம் சம்பாதிப்பது எப்படி? பொய்யல்ல நிஜம்!

ஜார்க்கண்ட் :

ஜார்க்கண்ட் மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 17 %-லிருந்து கூடுதலாக 11% அதிகரித்து மொத்தம் 28% டிஏ வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஹரியானா:

ஹரியானா மாநில அரசு 11% டிஏ உயர்வை அறிவித்து தனது அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படியை கடந்த ஜூலை 1, 2020 துவக்கத்தில் இருந்தே வழங்கி வருகிறது.

கர்நாடகா:

அண்டை மாநிலமான கர்நாடகா கொரோனா நெருக்கடியால் தனது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை சிறிது மட்டுமே உயர்த்தியுள்ளது. 28% அகவிலைப்படி உயர்வை அளிக்காமல், கூடுதல் உதவி தொகை வழங்குவதாக அறிவித்து, 21.5% என்ற அளவில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 28% டிஏ உயர்வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தவிர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவை (house rent allowance) 2% வரை அதிகரிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: