ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆஹா!! ஜூலை 1 முதல் மீண்டும் உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 

ஆஹா!! ஜூலை 1 முதல் மீண்டும் உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 

இந்த மாதத்தில் உங்கள் வீட்டு பட்ஜெட் அதிகரிக்க பல வாய்ப்புகள்

இந்த மாதத்தில் உங்கள் வீட்டு பட்ஜெட் அதிகரிக்க பல வாய்ப்புகள்

7th Pay Commission | 7வது ஊதியக்குழுவின் சமீபத்திய பரிந்துரைகளின் படி, ஜூலை 1ம் தேதி அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை மீண்டும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது, இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது.

1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அமைச்சரவை மார்ச் 30 அன்று அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

கூடுதல் தவணை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பட்டு வருகிறது.

மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) புள்ளி விவரங்களின் படி அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021 இல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. அதேபோல, ஜனவரி 2022 இல் 0.3 புள்ளிகள் குறைந்து 125 .1 ஆகவும், பிப்ரவரி மாதத்திற்கான புள்ளிகள் 0.1 புள்ளிகள் குறைந்து 125 ஆகவும் இருந்தது.

மார்ச் மாதத்தில், 1 புள்ளி ஏற்றம் காணப்பட்டது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக உள்ளது. ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி எண்கள் இன்னும் வரவில்லை. மார்ச் மாதத்தில், 1 புள்ளி ஏற்றம் காணப்பட்டது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக உள்ளது. ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி எண்கள் இன்னும் வரவில்லை. பிறகு குறியீடு 126க்கு மேல் சென்றால் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒருவேளை 4 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஒட்டுமொத்த அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்ககூடும்.

Also Read : ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிக்கபடுவதற்கான காரணங்கள் என்னென்ன?

மார்ச் மாதம் வெளியான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) புள்ளி விவரங்கள் அகவிலைப்படி மறுசீரமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கட்டாயம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களின் ஏசிபிஐ புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ஜூலை-ஆகஸ்ட் காலகட்ட ஏசிபிஐ புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : தயாராக இருங்கள்.. இந்த நாளில் ரூ.2000 அக்கவுண்டுக்கு வர போகிறதாம்!

சமீபத்திய அறிவிப்பின் மூலம், வழக்கமாக ஜூலை மாதம் நிர்ணயிக்கப்படும் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பண வீக்கம் போன்ற காரணங்களால் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாமலும் போகலாம் என்ற தகவல் அரசு ஊழியர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Central government, Government Employees