இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வங்கி கணக்கு இல்லாத மக்களே இருக்க முடியாது. அதிலும் எளிய மக்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக அஞ்சல் நிலைய அக்கவுண்டுகள் இருக்கின்றன. அஞ்சல் நிலையத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி உங்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே நீங்கள் அக்கவுண்ட் தொடங்க முடியும். அஞ்சல் நிலையத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் சில வரிசலுகைகள் வழங்கப்படுகின்றன.
அஞ்சல் நிலையத்தில் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பு அக்கவுண்ட் மூலமாக ஆண்டுக்கு நீங்கள் பெறக்கூடிய ரூ.10,000 வரையிலான வட்டி தொகைக்கு வரிச்சலுகை பெற முடியும். ஆன்லைனில் பேலன்ஸ் பார்ப்பதற்கு உங்கள் சேமிப்பு கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம் ஆகும். ஒருவேளை மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால், உங்கள் அஞ்சல் நிலைய கணக்கின் சிஐஎஃப் எண் கொண்டு மொபைல் எண்-ஐ இணைக்க முடியும். இப்போது பேலன்ஸ் சரி பார்ப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இ-பாஸ்புக் வசதி
1. உங்கள் மொபைலில் அஞ்சல் நிலைய ஆப் டவுன்லோட் செய்து, அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்தவன் மூலமாக லாகின் செய்யவும்.
2. பேலன்ஸ் & ஸ்டேட்மென்ட் என்ற தலைப்பை கிளிக் செய்யவும்.
3. மினி ஸ்டேட்மென்ட் என்பதை தேர்வு செய்து ok கொடுக்கவும்.
4. இதையடுத்து பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் உள்ள பக்கத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு நேரடியாக பேலன்ஸ் பார்க்கலாம்.
5. ஸ்டேட்மெண்ட் பெற விரும்பினால் குறிப்பிட்ட கால வரையறை தேர்வு செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
போன் மெசேஜில் மூலமாக பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
மெசேஜ் மூலமாக பேலன்ஸ் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், REGISTER என டைப் செய்து 7738062873 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும். உங்கள் மொபைல் எண் ரெஜிஸ்டர் ஆன பிறகு, மீண்டும் அதே எண்ணுக்கு BAL என்று டைப் செய்து அனுப்பினால் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல MINI என்று டைப் செய்து அனுப்பினால் உங்கள் ஸ்டேட்மெண்ட்டை தெரிந்து கொள்ள முடியும்.
மிஸ்டு கால் சேவை:
மிஸ்டு கால் சேவையின் மூலமாக உங்கள் அஞ்சல் நிலைய அக்கவுண்டில் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்ட் தெரிந்து கொள்வதற்கு, முதலில் நீங்கள் 8424054994 என்ற எண்ணுக்கு கால் செய்து ரெஜிஸ்டர் செய்யவும். பின்னர் மீண்டும் அதை எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உங்கள் பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மென்ட் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
Also Read : 5 வருஷத்துல ரூ.9 லட்சம் கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
IPPB மொபைல் ஆப்:
இந்த ஆப் டவுன்லோட் செய்து, அதில் உங்கள் அக்கவுண்ட் எண், சிஐஎஃப் எண், பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதைத்தொடர்ந்து நீங்கள் அ-பின் செட் செய்து கொண்டால், தேவைப்படும் சமயங்களில் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
ஃபோன் பேங்கிங்:
உங்கள் மொபைலில் இருந்து 155299 என்ற எண்ணுக்கு டயல் செய்யவும். அதில் வரக்கூடிய ஐவிஆர்எஸ் வழிமுறைகளை பின்பற்றவும். உங்களுக்கான மொழியை தேர்வு செய்து பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மென்ட் விவரங்களை பெற்றுக் கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Post Office, Savings