ஹோம் /நியூஸ் /வணிகம் /

7 வகையான வீட்டு காப்பீடு திட்டங்கள் - எந்த திட்டங்கள் என்னென்ன கவரேஜ் வழங்குகிறது.!

7 வகையான வீட்டு காப்பீடு திட்டங்கள் - எந்த திட்டங்கள் என்னென்ன கவரேஜ் வழங்குகிறது.!

வீட்டு காப்பீட்டுத் திட்டம்

வீட்டு காப்பீட்டுத் திட்டம்

Home Insurance Plans | பொதுவாகவே வீட்டுக் காப்பீட்டு திட்டங்கள் என்று வரும் போது அதில் ஓரிரு வகை மட்டும் தான் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆயுள் காப்பீடு, உடல்நல காப்பீடு, விபத்துக் காப்பீடு என்பது போல நகைகள், வாகனம், வீடு ஆகியவற்றுக்கும் காப்பீடு இருக்கிறது. குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டினாலோ அல்லது வீடு வாங்கினாலோ வீட்டுக் காப்பீடு தற்போது மிகவும் அவசியமாகிறது. வீட்டுக்கான காப்பீடு மிகப்பெரிய நஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.

வீடு, கட்டிடம், வீட்டில் உள்ள பொருட்கள் ஆகியவற்றுக்கு புயல், மழை, வெள்ளம், ஆகிய இயற்கை பேரழிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் விபத்து, திருட்டு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு காப்பீடு இருந்தால் இழப்பீடு பெற முடியும்.

பொதுவாகவே வீட்டுக் காப்பீட்டு திட்டங்கள் என்று வரும் போது அதில் ஓரிரு வகை மட்டும் தான் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மொத்தம் ஏழு வகையான வீட்டுக் காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன. என்னென்ன திட்டங்களில் எந்த வகையான பாதுகாப்பு கிடைக்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

வீட்டு அமைப்பு, கட்டுமானம் காப்பீடு:

வீட்டு கட்டிடம், கூரை, உள்ளிட்ட வீட்டின் அமைப்பில் ஏதேனும் பாதிப்பு அல்லது நஷ்டம் ஏற்பட்டால், இந்த காப்பீட்டின் மூலம் இழப்பீடு பெற முடியும். திருட்டு, கொள்ளை மற்றும் தீவிரவாத தாக்குதலால் வீட்டுக்கூரை, சுவர்கள், வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஃபிட்டிங்குகள் ஆகியவற்றுக்கான கவரேஜ் உள்ளது.

வீட்டில் உள்ள பொருட்கள், சாதனங்களுக்கான காப்பீடு:

வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள், நகைகள், ஃபர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு, கொள்ளை, தாக்குதல், இயற்கை பேரழிவு, ஆகியவற்றால் திருடு போனாலோ, சேதமடைந்தாலோ இந்த பாலிசியில் அதற்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

முழுமையான காப்பீடு (Comprehensive):

இந்த காப்பீட்டின் பெயரில் உள்ளது போலவே, இந்த காப்பீட்டுத் திட்டம் என்பது முழுமையான கவரேஜ் வழங்குகிறது. அதாவது, வீட்டின் அமைப்பு, கட்டிடம், கட்டுமானம், வீட்டில் இருக்கும் ஃபிட்டிங்குகள் மட்டுமல்லாமல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீட்டில் இருக்கும் சாமான்கள், நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றுக்குமான காப்பீட்டை வழங்குகிறது. ஆனால் காப்பீடு வாங்குவதற்கு முன்பே வீட்டில் இருந்த சேதங்கள் அல்லது இழப்புகளுக்கு இந்த கவரேஜ் சேர்க்கப்படாது.

Also Read : ரூ.44 முதலீடு செய்தால் ரூ.27 லட்சம் உங்கள் கையில்.. எல்ஐசியின் சூப்பரான பிளான்

வீட்டு உரிமையாளர் காப்பீடு:

சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வீட்டை வாடகைக்கு கொடுப்பவர்கள் கூட அதற்கான காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் வாடகைக்கு கொடுக்கும்பொழுது வீட்டு உரிமையாளர் காப்பீட்டு திட்டத்தை தான் பெற முடியும். நீங்கள் தனிநபர்களுக்கு, குடும்பம் வசிக்க வாடகைக்கு கொடுத்தாலும் சரி,  உங்களுடைய சொத்தை / கட்டிடத்தை / இடத்தை பொருட்களை ஸ்டோர் செய்வதற்காக குடோன் அல்லது அலுவலகத்திற்கு வாடகைக்கு கொடுத்தாலும் சரி, இந்த காப்பீட்டு திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read : குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விருப்பமா? நல்ல லாம் தரும் டாப் 5 திட்டங்கள்

வாடகைதாரர் காப்பீடு:

வீட்டு உரிமையாளர் தன்னுடைய சொத்துக்கு காப்பீட்டை வாங்குவது போலவே, வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபரும் டெனன்ட் இன்சூரன்ஸ் என்று கூறப்படும் வாடகைதாரருக்கான காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் கூட திருட்டு, கொள்ளை மற்றும் தீ விபத்து போன்ற சம்பவங்கள் ஏற்படலாம். எனவே வீட்டு உரிமையாளர் வாங்கும் வீட்டுக் காப்பீட்டு திட்டத்தில், வாடகைக்கு குடியிருப்பவரின் பொருட்கள் சேதமடைவதற்கு இழப்பீடு சேர்க்கப்படுவதில்லை. எனவே குடியிருக்கும் நபர் அவருடைய பொருட்கள் சேதம் அடையும் பொழுது இந்த காப்பீட்டு திட்டம் அதற்கான இழப்பீட்டுக்கு கவரேஜ் வழங்குகிறது.

தீ விபத்துக் காப்பீடு:

பொதுவாகவே வீட்டுக்கான காப்பீட்டு திட்டத்தில் விபத்துகள் மூலம் ஏற்படக்கூடிய சேதம் மற்றும் நஷ்டத்திற்கு கவரேஜ் உள்ளது. ஆனால் தனியாக தீ விபத்துக்கான காப்பீடும் உள்ளது. இந்த காப்பீடு திட்டம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே கவரேஜ் கொடுக்கிறது. தீ விபத்தால் வீடு எந்த அளவுக்கு சேதம் அடைந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் மட்டுமே அதற்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்.

Also Read : திருமணமான தம்பதிகளா? ரூ.200 முதலீடு செய்தால் ரூ.72,000 ஓய்வூதியம் பெறலாம்!

திருட்டு, கொள்ளை காப்பீடு:

வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சாதனங்கள் வைத்திருக்கும் நபர்கள், மேலும் அடிக்கடி வழிப்பறி, திருட்டு, கொள்ளை ஆகிய சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் இருப்பவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். திருட்டு, கொள்ளை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய நஷ்டத்திற்கு அன்றைய மார்க்கெட் விலை அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும்.

First published:

Tags: Home insurance, Tamil News