ஹோம் /நியூஸ் /வணிகம் /

7 மாதம் இல்லாத அளவு அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி.. காரணம் என்ன?

7 மாதம் இல்லாத அளவு அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி.. காரணம் என்ன?

உயரும் சமையலெண்ணெய் இறக்குமதி

உயரும் சமையலெண்ணெய் இறக்குமதி

7 month high in the india's oil import : மே மாதத்தில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி ஏழு மாதங்களில் இல்லாத அளவு மிக அதிகமாகவும், ஏப்ரல் மாதத்தில் இருந்த இறக்குமதி 15% அதிகமாகவும் இருந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய சமயலறையில் இன்றியமையாத ஒரு பொருள் என்றால் அது எண்ணெய். தோசைக்கு , பூரி பொறிக்க, குழம்பு தாளிக்க, சமோசா பொறிக்க, வடை சுட என்று எண்ணெய் இல்லாத சமையலே இல்லை எனும் அளவிற்கு முக்கிய அங்கமாக உள்ளது.

உலகின் அதிகப்படியாக எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியா. உள்ளூர் தயாரிப்புகள்  போதிய அளவில் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்தும் எண்ணெய்யை  இறக்குமதி செய்கிறோம். உலகில் அதிக அளவிலான எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் நம் இந்தியா தான்.

நம் எண்ணெய்த் தேவையின் பெரும்பங்கை இவ்வளவு ஆண்டுகாலமாக இந்தோனேசியா பூர்த்தி செய்து வந்தது.  உலகின் மிகப்பெரிய  தாவர எண்ணெய் ஏற்றுமதி நாடாகத் திகழும் இந்தோனேஷியா, உள்நாட்டில் அதிகரித்து வரும் தாவர எண்ணெய்யின் விலையைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 28 அன்று எண்ணெய் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியது.

இதனால் இந்தோனேசியாவில் இருந்து இந்தியா எண்ணெய்  இறக்குமதி செய்வது மே மாதத்தில் சரிந்தன. ஆனால் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மலேசியா, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவில் இருந்து அதிகமாக எண்ணெய்யை வாங்கி உள்நாட்டின் தேவையை ஈடு செய்துள்ளது என்று தாவர எண்ணெய் தரகு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘சன்வின் குழு’மத்தின் தலைமை நிர்வாகி சந்தீப் பஜோரியா கூறினார்.

ஆனால்,மே மாதத்தில் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி ஏழு மாதங்களில் இல்லாத அளவு மிக அதிகமாகவும், ஏப்ரல் மாதத்தில் இருந்த இறக்குமதியை விட  15% அதிகமாகவும் இருந்துள்ளது என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஏப்ரல் மாதத்தில் 572,508 டன்னாக இருந்த பாமாயில்  இறக்குமதி மே மாதத்தில் 660,000 டன்களாக உயர்ந்துள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மே 23 முதல் எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அனுமதித்தது, ஆனால் உள்நாட்டு விநியோகங்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளையம் கையில் வைத்துள்ளது.இதனால் முன்னர் இருந்த அளவு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

இது மட்டும் அல்லாது, இந்தியாவின் சோயா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் 315,853 டன்னிலிருந்து 352,614 டன்னாக உயர்ந்துள்ளது

ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றப்படுகிறதா - ரிசர்வ் வங்கி விளக்கம்

புது தில்லி 2 மில்லியன் டன் சரக்குகளுக்கு வரியில்லா இறக்குமதியை அனுமதித்துள்ளது. இதனால் வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் சோயா எண்ணெய் இறக்குமதி மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் மே மாதத்தில் 67,788 டன்னிலிருந்து 123,970 டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தியா அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிடம் இருந்து சோயா எண்ணையையும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் வாங்குகிறது. உக்கரைன் - ரஷிய போரால் தாவர எண்ணெய் இறக்குமதி என்பது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

First published:

Tags: Cooking Oil, Increased import tax, India's oil demand, Indonesia