முகப்பு /செய்தி /வணிகம் / 2022 -ல் ஜனவரி 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் - RBI அறிவிப்பு

2022 -ல் ஜனவரி 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் - RBI அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

நாட்டின் சிறந்த நிதி நிலைமைகளுக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதனால் உங்கள் தனிப்பட்ட நிதிகள் விஷயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வாறு நிதி சார்ந்த விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

புதிய ஆண்டை வரவேற்க நாம் அனைவரும் தயாராகி வரும் அதேவேளையில், நாட்டின் சிறந்த நிதி நிலைமைகளுக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதனால் உங்கள் தனிப்பட்ட நிதிகள் விஷயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வாறு நிதி சார்ந்த விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

பாதுகாப்பானதாக மாறும் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகள்:

பாதுகாப்பான கார்டு பேமெண்ட்டுகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற,  வணிகர்கள் தங்கள் தளங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கார்டு தொடர்பான எல்லா தரவையும் அகற்றுமாறு ஆர்பிஐ கோரியுள்ளது. அதன்படி இனி, ​​ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கார்டு பேமெண்ட்டில் ஈடுபடும் போது, ​​தங்களது முழு அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும் அல்லது டோக்கனைசேஷன் செய்ய வேண்டும். இது மறைமுகமாக செயல்படும் ஆதாரைப் போலவே இருக்கும். அதாவது சரியான அட்டை விவரங்கள் யாருக்கும் புரியாது.

கடுமையாக்கப்படும் ஜிஎஸ்டி விதிகள்:

2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட மறைமுக வரி விதிகள் மேலும் கடுமையாக்கப்படும். வெளியான தகவலின்படி, புத்தாண்டு தொடக்கத்தில் CGSTயில் பல மாற்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். சில மாற்றங்களில் வரிக்கு உட்பட்ட விநியோகம், வரிக் கடன்களுக்கான தகுதி மற்றும் சில வழக்குகள் தொடர்பாக மேல்முறையீடுகளை தாக்கல் செய்வது தொடர்பான விதிமுறைகள் ஆகியவையும் அடங்கும்.

ALSO READ |  ஜனவரி 1 முதல் டோக்கனைசேஷன் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ATM-களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயரலாம்:

ஏடிஎம் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை இலவச வரம்புகளுக்கு அப்பால் அவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது அந்த கட்டணத்தின் விலை அதிகமாக இருக்க போகிறது. மேலும் பணமில்லாத பரிவர்த்தனைகளும் குறைக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, இப்போது ஒருவருக்கு தனது இலவச பரிவர்த்தனைகள் முடிந்தபிறகு, அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அவரிடம் ரூ. 21 வசூலிக்கும். இவ்வாறு ஒருவர் தனது சொந்த வங்கி ஏடிஎம்மில் இருந்து இலவச ரொக்கமற்ற மற்றும் பண பரிவர்த்தனைகள் 5 ஆகவும், வங்கி அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இலவச பரிவர்த்தனைகள் 3 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்ட வட்டி விகித மாற்றங்கள்:

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் பத்திர வருவாயின் காரணியாக தீர்மானிக்கப்படுகிறது. விகிதத்தில் தொடர்ச்சியான இடைநிறுத்தத்திற்குப் பிறகு, தற்போது திருத்தம் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. அனைத்து தபால் அலுவலக திட்டங்களிலும், சுகன்யா சம்ரித்தி 7.6% என்ற அதிகபட்ச விகிதத்தைப் பெறுகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி டெபாசிட்களுக்கு இப்போது கட்டணம் விதிக்கிறது.

ALSO READ |  போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்குவது ஏன் முக்கியம் தெரியுமா?

குறிப்பிட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட பண வைப்புகளுக்கு, இந்த கட்டணம் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, சில வங்கிகளில் 2022 இல் பண வைப்பு இலவசம். பேமெண்ட்ஸ் வங்கியைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் தொகை வைத்திருக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எல்பிஜி விலைகள் ஜனவரி 1 முதல் திருத்தப்படலாம்:

கடந்த மாதம், உள்நாட்டு எல்பிஜி விலைகள் மாற்றப்படவில்லை. அதே நேரத்தில் வணிக சிலிண்டரின் விலை அதிகமாக இருந்தது. நாட்டிலுள்ள எல்பிஜி விலைகள், இறக்குமதி சமநிலை விலையைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன, அதாவது வெளிநாட்டு சந்தையில் எல்பிஜி விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ALSO READ | இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

நாமினி சேர்த்தல் செயல்முறையை முடித்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே EPF தொடர்பான பலன்கள் கிடைக்கும்:

டிசம்பர் 31, 2021க்குள் EPF நாமினேஷனை முடிக்க வேண்டும் என்று புதிய அறிவுறுத்தல் வந்துள்ளது. இது போன்ற சுமூகமான செயல்முறையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, EPF சந்தாதாரர்கள் இறந்து விட்டால், அவரது நாமினி ஆன்லைனில் எளிதாக உரிமைகோரலை தாக்கல் செய்யலாம்.

First published:

Tags: RBI, Reserve Bank of India