ஒருவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பது உழைக்கும் நபர்களிடையே பொதுவான நடைமுறையாகும். சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளது. வங்கி சேமிப்பு கணக்குகள், முதலீடுகள், அஞ்சலக சேமிப்பு கணக்குகள், என்று. சமீப காலமாக மத்திய அரசு அஞ்சலக சேமிப்புகளை அதிகப்படுத்த அதன் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருப்பு தொகையை தெரிந்துகொள்ள இன்னும் பலர் அஞ்சலகங்களுக்கு செல்கின்றனர். ஆனால் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில், தபால் அலுவலககணக்கு விபரங்களை இருக்கும் இடத்திலேயே பெற வழிகள் உள்ளது.
அஞ்சல் அலுவலகங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இதில் அடங்கும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது அல்லது மிஸ்டு கால் கொடுப்பது போல தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்ப்பது எளிது.
7 எளிமையான வழிகள் இதோ:
எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் "BALANCE" என டைப் செய்து 7738062873 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். சில நிமிடங்களில், உங்களது தபால் நிலைய இருப்பு விவரங்கள் அடங்கிய செய்தியைப் பெறுவார்கள்.
அதேபோல், பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 8424054994 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அனுப்பினால், சில நிமிடங்களில் கணக்கு இருப்பு விவரங்கள் SMS அனுப்பப்படும்.
IPPB மொபைல் செயலி என்பது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வழியாகும். அதுமட்டும் இன்றி கூகுள்பே, போன்பே, போல IPPB செயலி மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்துகொள்ளலாம்.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க இ-பாஸ்புக் வசதி அல்லது ஊடாடும் குரல் பதில் அமைப்பு- Interactive Voice Response System (IVRS) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
ஐவிஆர்எஸ் மூலம் இருப்பைச் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 155299 என்ற எண்ணை அழைத்து, வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க நெட் பேங்கிங்(Net banking ) மற்றொரு வசதியான முறையாகும். வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ தபால் அலுவலக வலைத்தளத்தில் தங்கள் கணக்கு எண்ணை வைத்து கணக்கில் இருக்கும் பணம் மற்றும் பரிவர்த்தனை பற்றிய விபரங்களை பார்வையிடலாம்.
கடைசியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அஞ்சல் அலுவலகத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதில் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அடங்கிய செய்தியைப் பெற உள்ளிட வேண்டும். QR குறியீட்டை போட்டோ எடுத்து சேமித்துக்கொண்டால் பின்னர் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.