ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு.. குறையாத பண பரிவர்த்தனை

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு.. குறையாத பண பரிவர்த்தனை

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

ரிசர்வ் வங்கி தகவல்கள் படி, தற்போது பணம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை என்பது 30.88 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நவம்பர் 8, 2016ல் இருந்த 17.7 லட்சம் கோடி என்பதை விட 71.84 சதவீதம் அதிகம் ஆகும். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணம் மூலம் பரிவர்த்தனை செய்வது என்பதே தற்போதும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

  சமீப காலத்தில் இந்தியாவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை இரண்டு நிகழ்வுகள்தான்.. ஒன்று 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட கொரோன தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு.. மற்றொன்று அதற்கு பணமதிப்பிழப்பு அறிவிப்பு. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

  இந்த அறிவிப்பு சாமானிய மக்கள் தொடங்கி மாபெரும் கோடீஸ்வரர்கள் வரையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இது கூறப்பட்டது. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்களுக்கு மாற்றாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், பணம் மூலமான பரிமாற்றங்கள் குறையும் என்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அசூர வளர்ச்சி அடைந்துள்ள போதிலும், பணம் மூலமான பரிவர்த்தனை தான் தற்போதும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  ரிசர்வ் வங்கி தகவல்கள் படி, தற்போது பணம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை என்பது 30.88 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நவம்பர் 8, 2016ல் இருந்த 17.7 லட்சம் கோடி என்பதை விட 71.84 சதவீதம் அதிகம் ஆகும்.  பொதுமக்களிடம் உள்ள நாணயம் என்பது மக்கள் பரிவர்த்தனை செய்வதற்கும், வர்த்தகங்களைத் தீர்ப்பதற்கும், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும் பயன்படுத்தும் நோட்டுகள் மற்றும் நாணயங்களைக் குறிக்கிறது. புழக்கத்தில் உள்ள நாணயத்திலிருந்து வங்கிகளில் பணத்தைக் கழித்த பிறகு இந்த எண்ணிக்கை வந்துள்ளது.

  இதையும் படிங்க: இனி போஸ்ட் ஆபீஸ் போக தேவையில்லை.. செல்வமகள் திட்டத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக வளர்ச்சி பெற்றுள்ள போதிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நாட்டின் ஜிடிபியில் அவற்றைன் விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. அக்டோபர் மாதத்தில் யுபிஐ மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது 12.11 லட்சம் கோடியை தொட்டுள்ளதும் ஆர்பிஐ தரவுகள் மூலம் தெரியவருகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Demonetisation, Money, UPI