Credit card: கிரெடிட் கார்டு வாங்கும் ஐடியா இருக்கிறதா? சரியான கார்டை தேர்வு செய்ய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கிரெடிட் கார்ட்

மிக முக்கியமாக கிரெடிட் கார்டை வாங்கினால் மட்டும் போதாது, குறித்த நேரத்திற்குள் பணத்தை கட்ட உங்களால் முடியுமா, நிதி ரீதியாக நீங்கள் தயாராக உள்ளீர்களா என்பதையெல்லாம் உறுதிப்படுத்தி கொண்ட பின்பே நீங்கள் ஒரு கிரெடிட் கார்டை பெற வேண்டும்.

  • Share this:
நம் மொபைலுக்கு பல சலுகைகளுடன் கூடிய கிரெடிட் கார்டு வேண்டுமா என்ற அழைப்பை அல்லது மெயிலை பெறாத நாட்களே இருக்காது. பல சலுகைகளுடன் கூடிய கிரெடிட் கார்டை வழங்க நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டிருக்கும் சூழலில், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.கிரெடிட் கார்டு பெறப்போகும் நிறுவனம் மற்றும் ஒரு குறிப்பிட்ட அட்டையின் அக்கவுண்ட் அம்சங்கள், நன்மைகள் மற்றும் பிற கட்டணங்கள் குறித்து நன்கு ஆராய வேண்டும்.

மிக முக்கியமாக கிரெடிட் கார்டை வாங்கினால் மட்டும் போதாது, குறித்த நேரத்திற்குள் பணத்தை கட்ட உங்களால் முடியுமா, நிதி ரீதியாக நீங்கள் தயாராக உள்ளீர்களா என்பதையெல்லாம் உறுதிப்படுத்தி கொண்ட பின்பே நீங்கள் ஒரு கிரெடிட் கார்டை பெற வேண்டும். கிரெடிட் கார்டுகளை மிக சரியாக கையாண்டால் அவை நமக்கு ஒரு சக்திவாய்ந்த நிதி கருவியாக இருக்கும் என்பதே உண்மை. உங்கள் தனித்துவமான செலவு முறைகள் மற்றும் நிதிகளுடன் ஒன்றிணைந்த கிரெடிட் கார்டை தேர்வு செய்வது என்பது உங்கள் கார்டின் செலவினத்தின் மதிப்பை அதிகரிக்க மிக முக்கியமான ஒன்றாகும். கிரெடிட் கார்டை பெற நீங்கள் திட்டமிட்டிருந்தால் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகுதி:

நாட்டின் பெரும்பாலான வங்கிகளில் பல கிரெடிட் கார்டு வகைகள் உள்ளன. எனினும் எல்லா வகை கிரெடிட் கார்டுகளுக்கும் நம்மால் தேவையான தகுதியை நம்மால் பெற முடியாது. ஏனென்றால் சிலவகை கிரெடிட் கார்டுகளை பெற உயர் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் தேவைகள் உள்ளன. எனவே உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு இருக்கும் கிரெடிட் கார்டுகளை மாற்றி முதலில் தீர விசாரித்து தகவல்களை திரட்டி கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க, உங்களுக்கு தகுதி இல்லாத கார்டு வகைகளுக்கு அப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

சரியான கார்டு தேர்வு:

ஒரு கிரடிட் கார்டை நீங்கள் பெற தகுதியாக இருக்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது உங்களுக்கு மிகவும் பொருத்தமான கிரடிட் கார்டாக இருக்க முடியாது. கிரெடிட் பிளேயிங் கார்டுகளில் கேஷ்பேக், ரிவார்ட் ஃபேக்டர்ஸ், ஏர் மைல்ஸ் போன்ற பல முக்கிய நன்மைகள் உள்ளன. எனினும் கூட உங்கள் செலவு முறைகளுடன் ஒத்து வரும் நன்மைகள் தரக்கூடிய ஒரு கார்டை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக உங்கள் கிரடிட் கார்டை ஆன்லைன் பர்ச்சேஸ் செய்வதற்கு முதன்மையாக பயன்படுத்த திட்டமிட்டால், ஆன்-லைன் பர்ச்சேஸின் போது கூடுதல் கேஷ்பேக் அல்லது ரிவார்ட் ஃபேக்டர்களை வழங்கும் ஒரு கார்டை தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். வாகன எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படும் கிரெடிட் கார்டை தவிர்க்க வேண்டும்.

பட்ஜெட்:

உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் சமாளிக்க நினைக்கும் போது, கார்டு நன்மைகளை அதிகரிக்க அனுமதிக்கும் ஒரு கிரெடிட் கார்டை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக உங்கள் மாத கார்டு செலவு பட்ஜெட் ரூ.20,000 என்றால் நீங்கள் அதற்கேற்ப கார்டு வேரியண்டை தேர்வு செய்ய வேண்டும். மாதம் ரூ.20,000 வரை கிரெடிட் கார்டு பயன்படுத்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 10% கேஷ்பேக் தரக்கூடிய கார்டை தேர்வு செய்தால், மாதம் ரூ.2,000 ஆண்டுக்கு ரூ.24,000 வரை நீங்கள் சேமிக்கலாம். அதுவே மற்றொரு வேரியண்ட் கார்டு இதே நன்மைகளை வழங்கும் நேரத்தில், உங்கள் மாதாந்திர கார்டு செலவு பட்ஜெட் ரூ.40,000 என்றால், இந்த பட்ஜெட் உங்கள் கார்டு நன்மைகளை அதிகரிக்க அனுமதிக்காது. எனவே கார்டை வைத்து நீங்கள் மாதம் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கணக்கை மனதில் வைத்து அதற்கேற்ப கார்டுகளை தேர்வு செய்தல் வேண்டும்.

Also read... SBI: ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நன்மைகளை வழங்கும் எஸ்பிஐ வங்கி: விவரங்கள் உள்ளே!

கடன் வரம்பு:

விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து கிரெடிட் கார்டு கணக்கில் இணைக்கப்பட்ட கடன் வரம்பை வங்கிகள் தீர்மானிக்கின்றன. உங்கள் மாத வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோருக்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட வெவ்வேறு கடன் வரம்புகளை வெவ்வேறு வங்கிகள் உங்களுக்கு வழங்கலாம். ஆனால் அதிக கடன் வரம்பைக் கொண்ட அட்டை வேரியண்ட்டிற்கு நீங்கள் செல்ல விரும்பலாம். இது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (credit utilization ratio) 30% மதிப்பெண்ணுக்குக் கீழே வைத்திருக்க உதவும்.

இருந்தாலும் அதிக கடன் வரம்பு என்பது நீங்கள் உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிக்க வழங்கப்பட்ட லைசென்ஸ் கிடையாது என்பதை உணர வேண்டும். உங்களுக்கு திடீரென்று அவசரமாக ஏற்படும் பெரிய செலவுகளை சமாளிக்க கொஞ்சம் உதவும் என்பதாக தான் பார்க்க வேண்டும். அவசர தேவைக்கு மட்டுமே அதிக கடன் வரம்பை நீங்கள் பயன்படுத்தி வந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதுகாக்கப்படும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பிரீமியம் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க தேவையான உங்கள் தகுதியை அதிகரிக்க உதவும்.

ஆண்டு கட்டணம்:

பூஜ்ஜிய வருடாந்திர கட்டண கிரெடிட் கார்டுகளுக்கு (zero annual fee credit cards) மார்க்கெட்டில் பஞ்சமில்லை என்றாலும், சில நேரங்களில் இவை வரையறுக்கப்பட்ட நன்மைகளைக் கொண்ட அடிப்படை வேரியண்ட்களாக மட்டுமே இருக்கின்றன. எனவே அதிக சலுகைகளுடன் கூடிய அதே நேரம் வருடாந்திர கட்டணம் உங்கள் பட்ஜெட்டை பாதிக்காத வகையில் இருக்கும் ஒரு பிரீமியம் கிரெடிட் கார்டை பெறுவதை கருத்தில் கொள்ளலாம்.

கூடுதல் சலுகைகள் மற்றும் வசதிகள்:

பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் கூடுதல் சலுகைகள் மற்றும் வசதிகள் தவிர கூடுதலாக கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்ஸ் போன்ற முக்கிய நன்மைகளுடனும் வருகின்றன. நீங்கள் பெற விரும்பும் கூடுதல் நன்மைகள் அடங்கிய கார்டை தேடி தேர்வு செய்ய வேண்டும். இந்த கூடுதல் நன்மைகளில் காம்ப்ளிமெண்ட்ரி டிராவல் இன்ஷுரன்ஸ், ப்ரீ லவுஞ்ச் அக்ஸஸ், ஜாய்னிங் கிப்ட்ஸ், உங்கள் கிரெடிட் கார்டுக்கு எதிராக கடன் வாங்குவதற்கான விருப்பம், எளிதான ஈஎம்ஐ வசதிகள், குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு அல்லது குறிப்பிட்ட ஈ-காமர்ஸ் தளங்களிலிருந்து ஷாப்பிங் செய்யும்போது சிறப்பு தள்ளுபடிகள், கார்டு வேரியண்ட்டை பொறுத்து ஹோட்டல் முன்பதிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் ஸ்பெஷல் டீல்கள் உள்ளிட்ட ஏராளமானவை அடங்கும். இந்த கவர்ச்சிகர சலுகைகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் உங்கள் அனுபவத்தை மேலும் இனிமையாக்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: