முகப்பு /செய்தி /வணிகம் / தங்கத்தை வைத்து கடன் வாங்கப் போகிறீர்களா? - இந்த ஆறு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

தங்கத்தை வைத்து கடன் வாங்கப் போகிறீர்களா? - இந்த ஆறு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஊரடங்கு காலத்தில் பலருக்கும் தங்கம் வலது கையாக இருந்தது. தங்கக் கடன் வாங்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மறக்காதீர்கள்!

அவசர செலவுகளுக்காக தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது ஒன்றும் புதிதல்ல. காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் தான். அதே போல, தங்கம் என்பது வெறுமனே ஒரு நகை அல்லது சொத்து என்பதைக் கடந்து, தங்க நகை உணர்வு பூர்வமாகவும் கலந்துள்ளது. நல்ல முதலீடாகவும், குடும்பத்தின் நிதி மற்றும் பொருளாதார நிலையைக் குறிப்பதாகவும் உள்ளது. சிறிய தொகை முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை, தங்கத்தை கடனாக வைத்து பணம் பெறலாம்.

நகையாகவோ அல்லது தங்க காசுகளாகவோ கட்டிகளாகவோ இருக்கும் தங்கத்தை கடன் வைத்து பணம் பெறலாம். மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் கோல்டு, ஆன்லைன் கோல்ட், தங்கப் பத்திரம் ஆகியவற்றையும் வைத்து கடன் வாங்கலாம். ஆனால் தங்கத்தை வைத்து கடன் வாங்குபவர்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டுமல்ல!

அவசர மருத்துவ செலவு, வீட்டு விசேஷம், படிப்புக்கான செலவு, உடனடி பணத் தேவை, உள்ளிட்ட பல விதமான செலவுகளுக்கு உடனடியாக கைகொடுக்கிறது, தங்கம்! தங்கத்தை கடனாக வைத்து நிதி ரீதியான தேவைகளை பூர்த்தி செய்ய நினைப்பவர்களுக்கு பல விதமான நன்மைகள் உள்ளன. உடனடியாக பணம் கிடைப்பது, குறைவான ஆவணங்கள் செயல்முறை, விரும்பியவாறு பணம் திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள், கூடுதல் தொகை பெறுதல் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. ஊரடங்கு காலத்தில் பலருக்கும் தங்கம் வலது கையாக இருந்தது. தங்கக் கடன் வாங்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மறக்காதீர்கள்!

அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கியில் மட்டுமே கடன் வாங்குங்கள்

தனியார் குழுக்கள் முதல் நிதி நிறுவனங்கள் வரை பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத என்று பலவிதமான நிறுவனங்கள் தங்க கடன் வழங்கி வருகின்றன. இவை குறைவான வட்டியில் அதிக தொகையை கடனாக வழங்குவதாக மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் எப்பொழுதுமே வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிதிநிறுவனத்தில் மட்டுமே உங்கள் தங்கத்தை வைத்து கடன் வாங்க வலியுறுத்தப்படுகிறது. குறைவான கட்டணத்தில், உங்கள் தங்கம் பாதுகாப்பாக இருக்கும்.

ALSO READ | ப்ரீ-பேக்கேஜிங்கில் வரும் பொருட்கள் மீதான GST வரி - விளக்கம் அளித்தது CBIC.!

தங்கத்தின் மதிப்பீடு

ஒரு நபருக்கு எவ்வளவு தொகையை கடனாக கொடுக்கலாம் என்பது தங்கத்தின் மதிப்பின் அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. தங்க நகையாக வைத்து நீங்கள் கடன் வாங்குகிறார்கள் என்றால் அந்த நகையில் செயற்கைகற்கள் பதித்து இருந்தால், அதன் எடை கழிக்கப்பட்டு அசலான தங்கத்தின் விலை தான் மதிப்பீட்டிற்கு கணக்கப்படும். அது மட்டுமல்லாமல் 24 கேரட் தங்கம் இருந்தால் அதற்கு உரிய மதிப்பில் கடன் தொகை கணக்கிடப்படும். அதேபோல நகை என்று வரும்பொழுது 22 காரட் நகைக்கு 18 காரட் நகையை விட அதிக தொகை வழங்கப்படும்.

வட்டி விகித ஒப்பீடு

தங்க நகைக் கடன் என்பது உங்கள் தங்கத்தின் மதிப்பில் மட்டும் கடன் வழங்கப்படுவதில்லை. உங்களுடைய ரிஸ்க் புரோஃபைல் அதாவது கிரெடிட் ஸ்கோர் என்பதும் பல இடங்களில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் எவ்வளவு வட்டி வசூலிக்க வேண்டுமென்று வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முடிவு செய்கின்றன. பொதுவாக தங்க நகைக்கான வட்டி விகிதம் 7% - 25% வரை விதிக்கப்படுகிறது. குறைவான சதவிகிதத்தில் தங்கக் கடன் வேண்டுமென்றால் நீங்கள் வெவ்வேறு தங்க நகை கடன் வழங்குபவர்களை பரிசீலனை செய்யலாம்.

ALSO READ | வங்கி சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு - சாமானிய மக்கள் பாதிப்பு

திருப்பி செலுத்தும் கால அட்டவணை

பெரும்பாலான தங்க நகைக் கடன்கள் குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் கடன்களாகவே வழங்கப்படுகிறது. அது ஒரு சில வாரங்கள் முதல் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் வரை பெரும்பாலும் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ரீபேமண்ட் காலம் வசதியாக இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்றார் போல நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

கடன் கட்டாமல் இருந்தால் என்ன ஆகும்

தங்க கடன் வாங்குபவர்கள் உரிய காலத்தில் வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்தி நகையை மீட்க முடியவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை பற்றி முதலில் நன்றாக சிந்தித்து அதன் பிறகு தான் கடன் வாங்க வேண்டும்! ஒரு சில தவணைகள் உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் நீங்கள் வட்டியுடன் சேர்த்து ஓரிரு வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள் கழித்து செலுத்தலாம். ஆனால் கடன் வழங்கியவர் பலமுறை அறிவித்தும் உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால் தங்க நகை ஏலத்தில் விடப்படும்.

First published:

Tags: Gold, Gold loan