• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு... தீபாவளிக்கு முன் உங்கள் பேலன்சை சரிபாருங்கள்!

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு... தீபாவளிக்கு முன் உங்கள் பேலன்சை சரிபாருங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

6 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் தீபாவளிக்கு முன் 8.5% வட்டி பெற உள்ள நிலையில் தற்போது உங்கள் பிஎஃப்-பில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதனை நீங்கள் எஸ்எம்எஸ் மூலமாகும், அதிகாரபூர்வ வலைத்தளத்தி

  • Share this:
நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையையும், நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும் பங்களிப்பு செய்யும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட தொகை வட்டி விகிதமாக கொடுக்கப்படுகிறது. அந்த தொகையை ஓய்வுக்குப் பின்னர் அல்லது தேவைப்படும் சமயத்தில் விண்ணப்பித்து ஊழியர்கள் முன்கூட்டியே கூட பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 12 இலக்க UAN எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று தங்களது தொகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் EPFO 2020-21 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு மிக விரைவில் கடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இந்த மாத இறுதிக்குள் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த சலுகையை பெற உள்ளனர். 2020-21 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிகளின் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2018-19ல், வட்டி விகிதம் 8.65 சதவீதமாகவும், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதம், 2016-17ல் வட்டி விகிதம் 8.65% ஆகவும் இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் காலத்தில் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் பலரும் வேலை இல்லாமல் திண்டாடியதால், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்று கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மார்ச் 2020ல் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY)ன் கீழ் வருங்கால வைப்பு நிதியின் 75 சதவீதத்தை முன்கூட்டியே பெறலாம் என அறிவித்தனர். COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போதும் இந்த சலுகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

6 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் தீபாவளிக்கு முன் 8.5% வட்டி பெற உள்ள நிலையில் தற்போது உங்கள் பிஎஃப்-பில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதனை நீங்கள் எஸ்எம்எஸ் மூலமாகும், அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.,

1. எஸ்எம்எஸ் :

UAN கொண்ட EPFO உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போனிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு "EPFOHO UAN ENG" என குறுஞ்செய்தியை அனுப்பலாம். எஸ்எம்எஸ் வெற்றிகரமாக அனுப்பப்பட்டவுடன் உங்கள் பிஎஃப் கணக்கில் தற்போது எவ்வளவு தொகை உள்ளது என்ற மெசேஜ் உங்களுக்கு வரும். அதன் மூலம் நீங்கள் உங்கள் தொகையை எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள முடியும்.

2. மிஸ்டு கால்:

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் EPF இருப்பை நீங்கள் தெரிந்து கொள்வோம். உங்கள் UAN எண்ணுடன் KYC தகவல் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதனை செய்ய முடியும்.

இவை இரண்டை தவிர பிஎப் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/site_en/index.php-க்கு சென்று உங்கள் UAN எண்ணை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: