முகப்பு /செய்தி /வணிகம் / 5G auction : 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்

5G auction : 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்

5ஜி அலைக்கற்றை  ஏலம்

5ஜி அலைக்கற்றை ஏலம்

5G spectrum auction : ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை போட்டியிடுகின்றன.

  • Last Updated :

இந்தியாவில் 5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலம் இன்று தொடங்குகிறது.

5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும்.

இந்நிலையில், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்வதற்கான ஏலம் இன்று தொடங்குகிறது. 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது. இது 20 ஆண்டுகளுக்கானது. இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை போட்டியிடுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    அதிகபட்சமாக 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செலுத்தியுள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை ஏலம் நடைபெறும். இந்த மாத இறுதிவரை ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: 5G technology, Adani, Airtel, Reliance Jio, Vodafone