முகப்பு /செய்தி /வணிகம் / 5G auction : 5G ஏலம் முதல் நாளில் ஏலத் தொகை ரூ1.45 லட்சம் கோடியைத் தாண்டியது

5G auction : 5G ஏலம் முதல் நாளில் ஏலத் தொகை ரூ1.45 லட்சம் கோடியைத் தாண்டியது

5ஜி அலைக்கற்றை  ஏலம்

5ஜி அலைக்கற்றை ஏலம்

முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான முதல் நாள் ஏலம் நிறைவு பெற்றது. 5- வது சுற்று ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

நான்காம் தலைமுறை இணையசேவையின் விரிவாக்கம் தான் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் 5G சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான ஏலம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது. ஏலம் பெறும் நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு சேவை அளிக்கலாம் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read:  ஆன்லைனில் தொடங்கிய 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம்.. ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் பங்கேற்பு.!

5G சேவையினால் தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 5G வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகள் மூலம் பயனர்களால் அனுப்பப்படும் தரவுகள் அதிவேகத்தில் சென்றடையும். 5G தொழில் நுட்பத்தின் நேர தாமதம் 1 மில்லி வினாடிக்கு குறைவாகவே இருக்கும். இதனால், தாமதம் தவிர்க்கப்பட்டு பயனர்களின் நேரம் மிச்சமாகும். 4G அலைக்கற்றையை விட 5G அலைக்கற்றையின் வேகம் 10 மடங்கு அதிகம். 5G சேவையால் ஒரு வினாடிக்கு 2 ஜிபி தரவுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் தரவுகளை பதிவேற்றவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

beam forming எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 5G சேவையில் பலவீனமான சமிக்ஞை, நெட்வொர்க் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்காது. வயர்லெஸ் இணைப்புகள் மூலம் செயல்படும் BLUETOOTH உள்ளிட்ட கருவிகளை அதிக வேகமாக செயல்பட வைக்க 5G சேவை உதவும்.உயர்தர 4k வீடியோக்களை buffering இல்லாமல் பிளே செய்ய முடியும். இதன் மூலம் மிகவும் துல்லியமாக ஒருவரது இருப்பிடத்தை கண்காணிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5 ஜி சேவையில் ஏராளமான பயன்கள் இருப்பது போலவே, பாதகங்களும் உள்ளன. அதிர்வெண் அலைகள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், 5G சேவையை அதிக தூரத்திற்கு வழங்குவது சவாலானதாக இருக்கும். 5G சேவையை வழங்குவதற்கு அதிக அளவிலான செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்படும். உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளால் 5G சேவையை வழங்குவதற்கு அதிக செலவாகும் என்பதால், செல்போன்களில் உள்ள பேட்டரிகளின் ஆயுட்காலம் குறையும். கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வேகம் அதிகமாக இருந்தாலும், பதிவேற்றம் செய்யும் வேகம் குறைவாக இருக்கும்.

இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்றுடன் ஏலம் நிறைவடையும் என்றும், அடுத்த மாதம் 14-ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீடு நிறைவடையும் என்றும் அவர் கூறினார். வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் 5-ம் தலைமுறை அலைக்கற்றை சேவைகள் தொடங்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

First published:

Tags: 5G technology, Adani, Airtel, Reliance Jio, Vodafone