Home /News /business /

5ஜி சேவையை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அனுபவிக்கலாம்.. ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

5ஜி சேவையை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அனுபவிக்கலாம்.. ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

“விரைவில் மும்பை நகரத்தில் ஜியோ 5ஜி எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்படவுள்ளன, அதில் ஜியோ 5ஜியின் அனுபவத்தை மக்கள் நேரடியாக உணர முடியும்” என கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பையில், 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 5ஜி அனுபவத்தை உணர்வதற்காக ஜியோ எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்படவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் பேசிய ஜியோ இயக்குனர் கிரன் தாமஸ், “விரைவில் மும்பை நகரத்தில் ஜியோ 5ஜி எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்படவுள்ளன, அதில் ஜியோ 5ஜியின் அனுபவத்தை மக்கள் நேரடியாக உணர முடியும்” என கூறினார்.

    மேலும், இது ஜியோ 5ஜி சேவை அறிமுகமாவதற்கு முன்பே அதன் சேவையை உணரும் வாய்ப்பு எனவும் அனைவரும் ஜியோ செண்டர்களுக்கு வந்து ஜியோ 5ஜி சேவையின் மேஜிக்கை அனுபவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பேசும் போது, “ஜியோ ஃபிக்ஸட் லைன் நெட்வொர்க் மூலம் 5ஜி இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அதிக தரம் வாய்ந்த, தேவைக்கு அதிகமான, எல்லா நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஃபைபர் ஆப்டிக் சேவையை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் டேட்டாவை கடத்தி செல்வதும் அதை மற்ற நாடுகளுடன் இணைப்பதும் தான் இது செய்யக்கூடிய வேலை. ஜியோவின் இந்த அகில இந்திய ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கின் நீளம் 11 லட்சம் கிலோ மீட்டர், இது உலகத்தின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.” என கூறினார்.

    ஜியோ ஃபைபர் தான் இந்தியாவின் முதன்மையான எஃப்.டி.டி.எக்ஸ் சேவையை வழங்கி வருகிறது எனவும் கூறினார். மேலும் இரண்டு ஆண்டுகள் கொரோனா லாக்டவுன் இருந்த போதிலும் கூட 70 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ ஃபைபர் பெற்றுள்ளது என கூறினார். மூன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் ஜியோவை தேர்வு செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

    மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: 5G technology, Mukesh ambani, Reliance AGM 2022, Reliance Jio

    அடுத்த செய்தி