கொரானா தொற்றின் அடுத்தடுத்த மூன்று அலைகளின் தாக்கத்தால் உலக நாடுகள் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்தன. குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் கொரோனா பெருந்தோற்று மற்றும் உக்ரை - ரஷ்யா போர் ஆகியவை பெரும் பொருளாதார நெருக்கடிகளை கொண்டுவந்தது. தற்போது மீண்டும் கொரானாவின் தாக்கம் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே பணவீக்கம் ஒருபுறம் இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்து நியூஸ் 18 நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால், நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது. இப்படியான நிலையற்ற அல்லது நிச்சயமற்ற சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்தித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நியூஸ் 18-க்கு கிடைத்துள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு லாபம் ஈட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருது தெரிய வந்துள்ளது. கொரானா பாதிப்பால் தற்போதைய சந்தை நிலவரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தாலும், தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருகிறது. ஜனவரி-ஜூன் 2022-ல் 100 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் மேல் லாபம் ஈட்டிய 3.5 சதவீதம் மட்டுமே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே , லாபம் ஈட்டியுள்ளது.
வென்ச்சர் இண்டலிஜென்ஸின் தரவுகளின்படி,முந்தைய நிதியாண்டில் 48 நிறுவனங்கள் திரட்டிய நிதி அளவு 29.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 57 நிறுவனங்கள், ஜனவரி-ஜூன் மாதங்களில் $100 மில்லியன் அல்லது அதற்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நிதி திரட்டும் நிறுவனங்களின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்திருந்தாலும், நிறுவனங்களுக்கு கிடைக்கூடிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
RBSA இன் நேரடி மற்றும் தலைவரான (முதலீட்டு வங்கி ஆலோசனை) அஜய் மாலிக் கூறுகையில், இந்த ஆண்டில் $100 மில்லியன் மற்றும் அதற்கு மேல் நிதி திரட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், திரட்டப்பட்ட மொத்தத் தொகையும் தேக்கமாகவே உள்ளது, இது ஒப்பந்த அளவு குறைந்துள்ளதைக் குறிக்கிறது. இது முதலீட்டாளர் மத்தியில் சகோதரத்துவம் குறைந்து வருவதை பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read : உங்கள் ஐசிஐசிஐ அக்கவுண்ட்டை வேறு கிளைக்கு ஆன்லைன் மூலம் எப்படி மாற்றுவது.?
வென்ச்சர் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் கூற்றுபடி, இந்த ஸ்டார்ட்-அப்களில் 3.5 சதவீதம் மட்டுமே $100 மில்லியன் அல்லது அதற்கு மேல் நிதி திரட்டியுள்ளன. ஒட்டுமொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 29.2 சதவீதமாக இருந்தாலும், அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், செலவை குறைப்பதற்காகவும் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த வாரம், எஜூடெக் யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் 600 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது.
பைஜூக்கு முன், வேதாந்து, அனாகாடமி மற்றும் கார்ஸ்24 உள்ளிட்ட புதிய தலைமுறை நிறுவனங்களும் இந்த ஆண்டு இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஓலா இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் சுமார் 2,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அதைத் தொடர்ந்து அனாகாடமி 600 க்கும் மேற்பட்டோரையும், கார்ஸ்24 600 மேற்பட்டோரையும், வேதாந்து 400க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் வேலையை விட்டு தூக்கியுள்ளது.
இது தவிர, ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ 150 ஊழியர்களையும், பர்னிச்சர்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஃபர்லென்கோ 200 ஊழியர்களையும், இன்ஃப்ளூயன்ஸர் தலைமையிலான சமூக வர்த்தக ஸ்டார்ட்-அப் ட்ரெல் 300 ஊழியர்களையும், பின்டெக் நிறுவனமான Ok Credit 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business