கிரெடிட் கார்டு கடனில் இருந்து தப்பிக்க உதவும் 5 வழிமுறைகள்...!

கிரெடிட் கார்டு கடனில் இருந்து தப்பிக்க உதவும் 5 வழிமுறைகள்...!

மாதிரி படம்

கிரெடிட் கார்டு பயன்படுத்தி நிதிச்சிக்கலில் தவிப்பவர்கள், அதில் இருந்து மீண்டுவர இது சரியான தருணமாக்கூட இருக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிரெடிட் கார்டு (credit card) பயன்படுத்தும் பெரும்பாலானோர், நிறுவனங்களில் பணியாற்றி மாத ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பு நடவடிக்கையால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி, அதனை கட்ட முடியாமல் ஆயிரக்கணக்கானோர் நிதிச்சிக்கலில் தவித்து வருகின்றனர். கிரெடிட் கார்டு பற்றி அறியாதவர்கள் மிகக் குறைவானவர்கள் எனச் சொல்லிவிடலாம். 

எஞ்சியிருப்போர் கிரெடிட் கார்டு கடன் அதிகரிப்பால் கவலையில் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். அதேவேளையில், கிரெடிட் கார்டு ஷாப்பிங்கை (credit card shopping) எளிதாக்கியது என்றால் மிகையல்ல. ஆனால், அந்த பணத்தை சரியான தேதியில் செலுத்தாமல், குறைந்தபட்ச தொகையாக செலுத்தினால் அதுவும் சிக்கலுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தி நிதிச்சிக்கலில் தவிப்பவர்கள், அதில் இருந்து மீண்டுவர இது சரியான தருணமாக்கூட இருக்கலாம். ஆகையால் கிரெடிட் கார்டு கடனில் இருந்து தப்பிக்கும் 5 எளிய வழிகளை இங்கு காணலாம்.

முதலாவதாக, ஒருவர் கிரெடிட் கார்டு கடனில் இருந்து தப்பிக்க, பர்சனல் லோனை (personal loan) நாடலாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், வட்டி விகிதத்தின் அடிப்படையில் பர்சனல் லோன் சிறந்தது. கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும் விண்ணைத் தொடும் வட்டியை விட பர்சனல் லோன் வட்டி மிகக்குறைவு.

இரண்டாவதாக, முதலீட்டை மூலதனமாக்குல். அதாவது, கிரெடிட் கார்டு கடன்களுக்கு ஏறத்தாழ 36 முதல் 40 விழுக்காடு வட்டி (interest) வசூலிக்கப்படுகிறது. இதனை ஒப்பிடும்போது, நம்மிடம் உள்ள சேமிப்புக்கு வரும் வட்டி மிகக் குறைவு. அதனால், அந்த சேமிப்பை எடுத்து கிரெடிட் கார்டு கடனை அடைப்பதே சாலச் சிறந்த வழியாகும்.

Also read... Gold Rate | ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 உயர்வு!மூன்றாவதாக, இது ஒரு ஈஸியான வழி என்று கூறலாம். அதாவது, இருக்கும் கிரெடிட் கார்டு கடன்களை எல்லாம் EMI-ஆக மாற்றி எளிதாக செலுத்தலாம்

நான்காவதாக, ஸ்னோபால் முறை. இந்த முறையில், நாம் வைத்திருக்கும் கடன்களையெல்லாம் பெரியது முதல் சிறியது வரை ஒரு ஆர்டராக பட்டியலிட வேண்டும். அதில், மிகச் சிறிய கடனை முதலில் செலுத்த திட்டமிட வேண்டும். அதுவரை பெரிய கடனுக்கு மினிமம் தொகை என்படும் வட்டி அல்லது வட்டியுடன் கூடிய சிறிய தொகையை மட்டும் செலுத்தி வர வேண்டும். ஒரு கட்டத்தில் சிறிய கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் பெரிய கடனை அடைக்கலாம்.

ஐந்தாவது மற்றும் கடைசியாக, கார்டு பயன்படுத்துவோர் டாப் அப் (top - up) லோன்களை நாடலாம். பர்சனல் லோன்களுக்கு அடுத்தப்படியாக கார்டு பயன்படுத்துவோருக்கு டாப் அப் லோன்கள் கிடைக்கும். அதாவது ஏற்கனவே இருக்கும் ஹோம்லோனுக்கு, டாப் அப் லோன்களை பெற்றுக்கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு லோன் வைத்திருப்பவர்களுக்கு எளிதாக டாப் அப் லோன் கிடைக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: