Home /News /business /

ZebPay உடன் உங்கள் கிரிப்டோகரன்சி பயணத்தைத் தொடர்வதற்கான 5 சிறந்த காரணங்கள்

ZebPay உடன் உங்கள் கிரிப்டோகரன்சி பயணத்தைத் தொடர்வதற்கான 5 சிறந்த காரணங்கள்

Zebpay

Zebpay

Crypto Currency | ZebPay மூலம், ஒருவர் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு கிரிப்டோ கரன்சியிலும் INR 100 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இது கிரிப்டோ சொத்துகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும், ஏற்றத் தாழ்வை எதிர்கொள்வதற்கும், அவர்களின் பயணத்தில் மேலும் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையைப் பெறுவதற்கும் புதிய பயனர்களுக்கு உதவுகிறது.

மேலும் படிக்கவும் ...
    2021 கிரிப்டோகரன்சிக்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக இருக்கிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் ரிப்டோகரன்சியை இயக்கும் அடிப்படைத் தளமான பிளாக்செயின் இயங்குதளத்தைப் பற்றி மட்டுமே பேசப்பட்டிருந்தது, ஆனால் இந்த ஆண்டில், கிரிப்டோவைப் பயன்படுத்தி மதிப்புள்ள பொருட்களை பரிவர்த்தனை செய்யவும் வாங்கவும் பயன்படும் NFT கள் மற்றும் மெட்டாவர்ஸ் போன்ற பயன்பாடுகள் அதிகரித்துள்ளன.

    பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருப்பதால், புதிய கால டிஜிட்டல் சொத்துக்களின் சகாப்தத்தில் சேர நீங்கள் இன்னும் காத்திருக்கிறீர்கள் என்றால், FOMO உணர்வு இருப்பது இயற்கையானதுதான். ஆனால் நீங்கள் அதைச் செய்வதற்கு முன், நீங்கள் பதிலளிக்க வேண்டிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று, நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை எந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் கிரிப்டோகரன்சிக்கான பயணத்தை எவ்வளவு சிறப்பாக தொடர முடியும் என்பதை அந்த ஒற்றை முடிவு வரையறுக்கலாம்.

    ஒரு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என்பது என்ன:

    கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் புரிந்துகொள்வோம். கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என்பது, கிரிப்டோ சொத்துக்களை வாங்கவும் வர்த்தகம் செய்யவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் ஒரு வணிகம் அல்லது நிறுவனம் ஆகும். பாரம்பரிய வங்கிக் கணக்குகள் அல்லது UPI போன்ற பிற கட்டண முறைகளிலிருந்து, இந்திய ரூபாய் போன்ற பாரம்பரிய கரன்சியை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர் கிரிப்டோ சொத்துக்களை வாங்குவதற்கு எக்ஸ்சேஞ்ச் முக்கியமாக உதவுகிறது.. 

    வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதற்குத் தவறான எக்ஸ்சேஞ்சைத் தேர்வுசெய்தால், கிரிப்டோகரன்சியை வாங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உங்கள் கிரிப்டோ சொத்து பயணத்தைத் தொடங்க, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றை நாங்கள் கண்டறிந்துள்ளோம் - அதான் ZebPay. எங்களைப் பொறுத்தவரையில் ZebPay ஐ விருப்பமான எக்ஸ்சேஞ்சாக மாற்றும் சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    ZebPay ஐத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்கள்:

    1. நுழைவுத் தடை இல்லை


    கிரிப்டோ சொத்துக்களை வாங்கவிருக்கும் பல புதிய பயனர்கள் நம்பும் கட்டுக்கதை என்னவென்றால், நாம் ஒரு முழு காயினை வாங்க வேண்டும் என்பதுதான். ஒரு பிட்காயின் தற்போது INR 36.5 இலட்சத்திற்கு வர்த்தகம் செய்யப்படுவதைப் பார்க்கும்போதோ அல்லது ஒரு ஈத்தரின் விலை INR 3 இலட்சம் என்று தெரியவரும்போதோ, அது கிரிப்டோ கரன்சிகளை வாங்க பலரைத் தடுக்கிறது

    உதாரணமாக ZebPay மூலம், ஒருவர் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு கிரிப்டோ கரன்சியிலும் INR 100 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இது கிரிப்டோ சொத்துகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கும், ஏற்றத் தாழ்வை எதிர்கொள்வதற்கும், அவர்களின் பயணத்தில் மேலும் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையைப் பெறுவதற்கும் புதிய பயனர்களுக்கு உதவுகிறது. உங்கள் ZebPay வாலட்டில் பணத்தை முதலீடு செய்து, கிரிப்டோவை வாங்கி, ZebPay இன் தனித்துவமான அம்சங்களுடன் உங்கள் போர்ட்ஃபோலியோ வளர்வதைப் பார்வையிடுங்கள்.

    1. 60+ கிரிப்டோகரன்சிகளுடன் உங்கள் சொந்த போர்ட்ஃபோலியோவை உருவாக்குங்கள்


    இன்று ஆயிரக்கணக்கான கிரிப்டோ சொத்துக்கள் உள்ளன, இருந்தபோதிலும் ஒரு சிலவற்றைப் பற்றி மட்டுமே அனைத்து நேரங்களிலும் பேசப்படுகின்றன. மற்றவை வெறுமனே மோசடிகளாக மாறுகின்றன (ஸ்க்விட் கேம் டோக்கன் நினைவிருக்கிறதா?). சிறந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என்பது முதல் 10 கிரிப்டோகரன்சிகளைக் காட்டிலும் கூடுதல் விருப்பத்தேர்வுகளை வழங்க வேண்டும், அதனால்தான் நாங்கள் ZebPay ஐப் பரிந்துரைக்கிறோம். கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என்பது ஒரு போர்ட்ஃபோலியோவை ஒரே கிரிப்டோ அல்லது 60 வெவ்வேறு கிரிப்டோக்களில் இருந்து உருவாக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் முதலீடுகளில் கூடுதல் விருப்பத்தேர்வுகளையும் வழங்குகிறது.

    1. கிரிப்டோவை ஹோல்டு செய்து சம்பாதிக்கலாம்

      உங்கள் கிரிப்டோ சொத்துக்களை உங்கள் ZebPay கணக்கில் வைத்திருப்பதற்காகக் கூடுதல் வருமானத்தைப் பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிப்டோக்கள் 0.5% முதல் 6% வரை தினசரி வருமானத்திற்குத் தகுதியானவை. வாடிக்கையாளரின் ஸ்பாட் அல்லது டிரேடிங் வாலட்டில் உள்ள இருப்பு மற்றும் நிலுவையில் உள்ள கேட்கும் (விற்பனை) ஆர்டர்களில் கூட வருமானம் தினமும் கணக்கிடப்படுகிறது. நீங்கள் கிரிப்டோவைச் சேமிப்பதற்காக மட்டுமே உங்களுக்கு வட்டி ஈட்ட உதவும் ஒரு சாதாரண வங்கிக் கணக்காக உங்கள் ZebPay கணக்கைக் கற்பனை செய்து பாருங்கள். எங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

    2. கடன் வழங்கும் இயங்குதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,

      ZebPay இன் பிரத்தியேக அம்சம், உங்கள் கிரிப்டோகரன்சியை எக்ஸ்சேஞ்சிற்குக் கடனாக வழங்கிஉங்கள் முதலீடுகளில் இன்னும் அதிக வருமானத்தைப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது.


    இப்போது, அது செயல்படும் விதத்தைக் காண்போம் -

    நீங்கள் ஒரு திறந்த காலத்திற்கு அல்லது நிலையான காலத்திற்கு எதிராக கடன் கொடுக்க முடிவு செய்யலாம். திறந்த காலத்தின் கீழ், உங்கள் கிரிப்டோ சொத்தின் மீதான வருமானத்தை நீங்கள் அன்றைய தினத்திற்கான வருமான அடிப்படையில்  பெறுவீர்கள். இந்த வருமானம் தினசரி அடிப்படையில் டெபாசிட் செய்யப்படும், மேலும் நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் கணக்கில் உள்ள உங்கள் இருப்பை நீங்கள் திருப்பித் தர முடிவு செய்யலாம்.

    நிலையான காலத்தின் கீழ், 7-நாள், 30-நாள், 60-நாள் அல்லது 90-நாட்களுக்கு உங்கள் கிரிப்டோவைக் கடனாகக் கொடுக்க நீங்கள் தேர்வுசெய்யலாம், இங்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கு ஏற்ப வருமான விகிதம் மாறுபடும். இந்த வருமானம் மற்றும் உங்கள் இருப்பு ஆகியவை குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும் உங்கள் வர்த்தக வாலெட்டில் டெபாசிட் செய்யப்படும்.

    அடிப்படையில், இவை பாரம்பரிய சந்தையில் ஒரு நிலையான வைப்பு கணக்கைப் போலவே செயல்படுகின்றன, நீங்கள் சொத்துக்களில் நிலையான வருமானத்தை ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், காலப்போக்கில் மதிப்பும் கூடும். உங்கள் முதலீடுகளில் அதிக வருவாயைப் பெற, உங்கள் கிரிப்டோ சொத்தை எக்ஸ்சேஞ்சிற்குக் கடனாகக் கொடுப்பது ZebPay ஐ சிறந்த தேர்வாக மாற்றும் மற்றொரு சிறந்த அம்சமாகும்.

    1. 66% க்கும் அதிகமான இந்திய முதலீட்டாளர்கள் மூலம் நம்பப்படுகிறது,


    ZebPay என்பது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் பழமையான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாகும். உண்மையைச் சொல்லப்போனால், 2020 ஆம் ஆண்டில் கிரிப்டோ இன்ஃப்ளூயன்ஸரான கிரிப்டோ கனூன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய முதலீட்டாளர்களில் 3 இல் 2 பேர் (அல்லது 66.6%) ZebPay இல் தங்கள் முதல் பிட்காயினை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    நீங்கள் தேர்வு செய்யும் கிரிப்டோகரன்சி தளத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று என்னவென்றால், அது எக்ஸ்சேஞ்சின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். இந்த இரண்டைப் பொறுத்த வரையிலும், ZebPay அதன் வலுவான தளம் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரப்புதலின் தலைமையாக இருப்பதை நீங்கள் காணலாம். மிக முக்கியமாக, இந்த எக்ஸ்சேஞ்சானது நாட்டின் பாதியளவிற்கும் மேற்பட்ட கிரிப்டோ முதலீட்டாளர்களால் நம்பப்படுகிறது - இது Zebpay இல் உங்கள் சொந்தக் கணக்கைத் திறக்கும்போது உங்களைப் பாதுகாப்பாக உணர வைக்கும்.

    பல நன்மைகள் கிடைப்பதால், உங்கள் சொந்த ZebPay கணக்கைத் திறந்து, அதன் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குவதற்கான பரிந்துரையை மட்டுமே நாங்கள் வழங்க முடியும். உங்கள் கணக்கை  இங்கே திறக்கவும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Crypto currency

    அடுத்த செய்தி