UPI பேமெண்ட் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு அம்சங்கள்
UPI பேமெண்ட்
யூபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் டிவைஸ்களை எப்படியாவது ஹேக் செய்யும் மோசடியாளர்கள், அவர்களது சேமிப்பு பணத்தை திருடி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்றால், 5 முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ் (யூபிஐ) என்ற வசதியின் காரணமாக இன்றைக்கு எலெக்ட்ரானிக் பேமெண்ட் என்பதும் மிகவும் எளிமையாகியுள்ளது. பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை ஒவ்வொரு நபரின் விரல் நுனி வரையிலும் இது கொண்டு வந்துள்ளது. புரியும்படி சொல்வது என்றால், நாம் ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாக பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகள் அனைத்தும் இந்த யூபிஐ வசதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
இந்த ஆப்-களில் உள்ள யூபிஐ வசதியை பயன்படுத்தி, ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் ஒருவருக்கு பணம் அனுப்பலாம், அதேபோன்று பணமும் பெற்றுக் கொள்ளலாம். பணப் பரிமாற்றம் என்பதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூபிஐ எளிமையாக்கியுள்ளது என்றாலும் கூட, இதை மையமாக வைத்து சில சைபர் குற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
யூபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் டிவைஸ்களை எப்படியாவது ஹேக் செய்யும் மோசடியாளர்கள், அவர்களது சேமிப்பு பணத்தை திருடி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்றால், 5 முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாரிடமும் யூபிஐ பின் நம்பர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் : உங்கள் யூபிஐ அக்கவுண்டில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 6 இலக்க அல்லது 4 இலக்க பின் நம்பரை எந்த காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு பரிவர்த்தனையின்போது இந்த பின் நம்பரை குறிப்பிடும்படி பயனாளருக்கு யூபிஐ ஆப்-கள் சுட்டிக்காட்டும். ஆக, ஏடிஎம் மையத்தை போல, யூபிஐ-யில் பின் நம்பர் செட் செய்த பிறகே நாம் அதை பயன்படுத்த இயலும். ஆக யூபிஐ பின் நம்பரை நாம் ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் ஃபோனில் ஸ்கிரீன் லாக் செட் செய்யவும் : மிக முக்கியமான ஆப்-கள், ஈமெயில், யூபிஐ சேவைகள், தனித் தகவல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கும் ஃபோனுக்கு எப்போதும் ஸ்கிரீன் லாக் செய்து வைக்க வேண்டும். அப்படியே இல்லாவிட்டாலும் நீங்கள் யூபிஐ ஆப் பயன்படுத்துபவர் என்றால் ஸ்கிரீன் லாக் செட் செய்யும்படி அதுவே உங்களுக்கு நினைவூட்டும். உங்கள் ஃபோன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதை வைத்து மோசடி செய்வதற்கான வாய்ப்புகளை தடுக்கும் அம்சமாக ஸ்கிரீன் லாக் இருக்கும். அதே சமயம், ஸ்கிரீன் லாக் பாஸ்வேர்டுகளை அவ்வபோது மாற்றம் செய்ய வேண்டும்.
யூபிஐ ஐடி-யை சரிபார்க்கவும் : எதிர் முனையில் உள்ள நபரின் யூபிஐ ஐடிக்கு நாம் பணம் செலுத்தும் வசதியை யூபிஐ ஆப் வழங்குகிறது. அதேபோன்று உங்களின் யூபிஐ ஐடியை பயன்படுத்தி பிறரிடம் இருந்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, பண பரிமாற்றம் செய்யும் ஒவ்வொரு சமயத்திலும் யூபிஐ ஐடியை ஒருமுறைக்கு, இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். தவறான பரிவர்த்தனைகளை தடுக்க இது உதவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட யூபிஐ ஆப் பயன்படுத்த வேண்டும் : நீங்கள் எத்தனை விதமான பண பரிமாற்ற ஆப்களை பயன்படுத்தினாலும், அவை அனைத்திற்கு அடிப்படை என்பது யூபிஐ ஒன்று மட்டுமே. ஒன்றுக்கும் மேற்பட்ட யூபிஐ ஆப்-கள் பயன்படுத்துவதால் தனிச் சிறப்புமிக்க பலன் எதுவும் கிடையாது. ஆனால், இது உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான பரிவர்த்தனைக்கு வழிவகை செய்துவிடும்.
வெரிஃபைடு செய்யப்படாத லிங்களை கிளிக் செய்ய வேண்டாம் : பெரும்பாலான சமயங்களில் வெரிஃபை செய்யப்படாத லிங்க்-களை பயனாளர்கள் கிளிக் செய்வதன் மூலமாகவே மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, வாட்ஸ் அப், மெசேஜ், ஈமெயில் போன்றவற்றிற்கு வரும் உறுதிப்படுத்தப்படாத லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் பின் நம்பர், ஓடிபி போன்றவற்றை கட்டாயம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.